என் மலர்
விருதுநகர்
- ராஜபாளையம் அருகே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.
- இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள வயலில் ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி உள்பட வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 நிமிடங்களில் இந்த தெளிப்பான்கள் மூலம் தெளிக்கவும், ஏக்கருக்கு ரூ. 600 மட்டுமே செலவு ஆவதால் நேரமும், கூலியும் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- அருப்புக்கோட்டையில் கவுன்சிலர் வீட்டில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- நேற்று மாலை இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காட்டு பாவா தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 40).10-வது வார்டு திமுக கவுன்சிலராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
நேற்று மாலை இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றார். இரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும்
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.
தமிழக அரசின் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றி மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றுள்ள, ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு பணிக்கொடையாக ரூ.10 லட்சம் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும்.
மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை போக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாக சீரமைப்பு குழு அமைக்க வேண்டும். தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும் என்பன உள்பட பல்ேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற நவம்பர் மாதம் மாநில மாநாடு நடத்தவும், 2023 ஜனவரி மாதத்தில் பெருந்திரள் மறியல் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- ராஜபாளையம் அருகே மனைவி கறிச்சோறு சமைத்து கொடுக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தர்ராஜபுரம், இந்திராநகரை சேர்ந்தவர் மாடசாமி (வயது 69) விவசாயி. இவர் நேற்று தனது மனைவியிடம் கறிக்குழம்பு வைத்து சோறு தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்த அவரது மனைவி ''நீங்களே சமைத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்'' என்று கூறவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாடசாமி விவசாயத்திற்கு பயன்படுத்தும் குருணை மருந்தை குடித்துள்ளார். பின்னர் தனது மகன் ஜெயபிரகாஷ் என்பவரிடம் ''நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை''. தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்து விட்டேன்.
உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் விஜயபிரகாஷ் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவி கறிச்சோறு செய்து கொடுக்காததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் விக்னேஷ்வரன்.
- வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 25). இவர் சில வருடங்களாக சின்ன வாடியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் நரேஷ்குமார். கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்கனவே இவருக்கும், தாதம்பட்டியைச் சேர்ந்த மதன்குமாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக விக்னேஷ்வரன் செல்போனில் மதன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சம்பவத்தன்று விக்னேஷ்வரன் சென்னல்குடிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் செல்வக்குமார் என்பவருடன் சின்ன வாடியூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மதன்குமார், அவரது நண்பர்கள் மகாராஜா, டி.காமராஜபுரத்தைச் சேர்ந்த கருப்புராஜா, துலுக்கப்பட்டியைச் சேர்ந்த குணா ஆகிய 4 பேர் விக்னேஷ்வரனிடம் தகராறு செய்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மதன்குமார் உள்பட 4 பேரும் விக்னேஷ்வரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.சிறிது நேரத்திற்கு பின் அந்தப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தினர். அதன் பின் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது.
இந்த சம்பவத்திற்கு பின் விக்னேஷ்வரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சின்ன வாடியூரில் உள்ள வீட்டுக்கு வந்தபோது உடல்நிலை மோசமானதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ்வரன் இறந்தார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஷ்வரனை தாக்கிய மதன்குமார், மகாராஜா, கருப்பு ராஜா, குணா ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
- தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக எம்.எல்.ஏ. பேசினார்.
- ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் காமராஜர் மேல் நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் மேல் நிலை பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்,ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் யூனியன் தலைவர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்க ளை வழங்கினர்.
விழாவில் தங்கப்பா ண்டியன் எம்.எல்.ஏ. பேசும் போது,எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. அத்தகைய கல்விக்கு நமது தமிழக முதல்வர் முக்கியத்தும் கொடுத்து வருகிறார். அவர் கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.
இந்த திட்டங்களை முறையாக பயன்படுத்தி மாணவ- மாணவியர்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பாக கல்வி கற்று ராஜபாளையம் தொகுதியிலிருந்து ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மருத்துவர் போன்ற உயரிய பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் வரவேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய எம்.பி தனுஷ் எம்.குமார் பேசும் போது, மற்ற மாநிலத்தைக்
காட்டிலும் நமது தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டமே என்றும், மாணவ- மாணவியர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பாலாஜி நாடார், தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் காமராஜ், கிளை செயலாளர் லட்சுமணன், ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளியை தவிர்த்து மற்ற விழா நாட்கள், திருவிழா, அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
- 5-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
சிவகாசி:
தீபாவளி, தசரா உள்ளிட்ட விழாக்களுக்காக சிவகாசியில் இருந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலை காரணம் காட்டி டெல்லி பகுதியில் பட்டாசு வெடிக்க அந்த மாநில அரசு தடை விதித்தது. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் படிப்படியாக தீபாவளியை தவிர்த்து மற்ற விழா நாட்கள், திருவிழா, அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்தநிலையில் 5-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியிலிருந்து அனுப்பப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த வருட தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை வாங்க டெல்லி வியாபாரிகள் ஏற்கனவே சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் முன்பணம் செலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆர்டர்களின் பேரில் டெல்லிக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் டெல்லி அரசு பட்டாசு வெடிக்க வருகிற ஜனவரி 1-ந்தேதி வரை தடை விதித்து நேற்று அறிவித்ததால், டெல்லிக்கு என தயார் செய்துவரும் பட்டாசுகள் தேங்கும் என்றும், இதனால் பல பட்டாசு நிறுவனங்கள் இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் கூறுகிறார்கள்.
- இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிப்பு.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு ஒரு மாதத்தில் தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத பவுர்ணமி வரும் 10-ந்தேதி வருகிறது.
மேலும் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (8.09.2022) முதல் 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர், சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டியன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதை கண்டித்தும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமை தாங்கினார். இதில் கணேசமூர்த்தி, வழக்கறிஞர் பகத்சிங், வரதராஜன், சேத்தூர் நகரச் செயலாளர் ராஜா, அய்யணன், மாயாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
- விருதுநகர் அருகே மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.என்.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி னார். இதில் ராதாகிருஷ்ணன்பள்ளிச் செயலர் டி.ஏ.எஸ். கிருஷ்ணன், உறுப்பினர்கள் ஸ்ரீதரன், வெங்கட்ராமன், திருமலை, மணி, வரதராஜன், தலைமை ஆசிரியர் கண்ணன், தலைமை ஆசிரியை கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் பகுதியில் ெரயில் பாதையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- 60 கிலோ எடை உடைய கான்கிரீட் கட்டைகளில், 52 கிலோ தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ராஜபாளையம்
ராஜபாளையம்- சங்கரன் கோவில் பிரிவில் 5 கி.மீ. தொலைவுக்கு ெரயில் பாதையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கரிசல்மண் பகுதியான இந்தப்பகுதியில் 60 கிலோ எடை உடைய கான்கிரீட் கட்டைகளில், 52 கிலோ தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கரிசல் மண் அமைப்பு கோடைகாலத்தில் சுருங்கும், மழைக்காலத்தில் விரிவடையும் தன்மை கொண்டது. இதனால் அந்த பகுதியில் ெரயில்களை 100 கி.மீ. வேகத்தில் இயக்க முடியவில்லை. எனவே அந்தப் பகுதியில் ெரயில் பாதை பலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் செம்மண் நிரப்பப்படும்.
அதன் மேல் சரளை கற்களுடன் கூடிய ெரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக நண்பகல் நேரத்தில் இயக்கப்படும் மதுரை - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை - மதுரை ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. தற்போது ஒரு கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்து விட்டன. மீதம் உள்ள பகுதிகளில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
- கபடி போட்டியில் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளி அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.
- விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர்களுக்கான கபடி போட்டி சி.எம்.எஸ். பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில், சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி அணியும்-வன்னிய ம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் வெற்றி பெற்ற காளீஸ்வரி அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
மம்சாபுரம் சிவந்திபட்டி மேல்நிலைப்பள்ளி அணியும்-வன்னி யம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் அணியும் மோதின. இதில் வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.






