search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs. 10"

    • டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும்

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.

    தமிழக அரசின் சில்லறை மதுபான விற்பனை கடைகளில் பணியாற்றி மரணம் அடைந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றுள்ள, ஓய்வு பெற உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு பணிக்கொடையாக ரூ.10 லட்சம் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும்.

    மாதாந்திர குடும்ப ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் மேலும் பணி நிரந்தரம் செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை போக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிர்வாக சீரமைப்பு குழு அமைக்க வேண்டும். தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க ேவண்டும் என்பன உள்பட பல்ேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற நவம்பர் மாதம் மாநில மாநாடு நடத்தவும், 2023 ஜனவரி மாதத்தில் பெருந்திரள் மறியல் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • பெருந்துறை அருகே கட்டிட நிறுவனத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்.
    • இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள திருவேங்கடம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). இவர் பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ஒரு கட்டிட நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது அலுவலகமும், குடோனும் ஒரு இடத்தில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு தனது அலுவலகம் மற்றும் குடோனை பூட்டிவிட்டு, காம்பவுண்ட் கேட்டையும் பூட்டிவிட்டு பெரியசாமி வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் காலை நிறுவனத்தில் வேலை செய்யும் பூபதி ராஜா என்பவர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது முன்புற காம்பவுண்ட் கேட் திறந்த நிலையில் இருந்துள்ளது.

    மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. பின்னர் உடனடியாக அவர் போன் மூலம் பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே பெரியசாமி அங்கு வந்து பார்த்த அவர் டேபிள் டிராயர் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×