கட்டிட நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு

பெருந்துறை அருகே கட்டிட நிறுவனத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்.இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கட்டிட நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள திருவேங்கடம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). இவர் பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ஒரு கட்டிட நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது அலுவலகமும், குடோனும் ஒரு இடத்தில் உள்ளது.

சம்பவத்தன்று இரவு தனது அலுவலகம் மற்றும் குடோனை பூட்டிவிட்டு, காம்பவுண்ட் கேட்டையும் பூட்டிவிட்டு பெரியசாமி வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் காலை நிறுவனத்தில் வேலை செய்யும் பூபதி ராஜா என்பவர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது முன்புற காம்பவுண்ட் கேட் திறந்த நிலையில் இருந்துள்ளது.

மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. பின்னர் உடனடியாக அவர் போன் மூலம் பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே பெரியசாமி அங்கு வந்து பார்த்த அவர் டேபிள் டிராயர் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com