என் மலர்
நீங்கள் தேடியது "Breaking Lock"
- பெருந்துறை அருகே கட்டிட நிறுவனத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்.
- இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள திருவேங்கடம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). இவர் பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ஒரு கட்டிட நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது அலுவலகமும், குடோனும் ஒரு இடத்தில் உள்ளது.
சம்பவத்தன்று இரவு தனது அலுவலகம் மற்றும் குடோனை பூட்டிவிட்டு, காம்பவுண்ட் கேட்டையும் பூட்டிவிட்டு பெரியசாமி வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் காலை நிறுவனத்தில் வேலை செய்யும் பூபதி ராஜா என்பவர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது முன்புற காம்பவுண்ட் கேட் திறந்த நிலையில் இருந்துள்ளது.
மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. பின்னர் உடனடியாக அவர் போன் மூலம் பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே பெரியசாமி அங்கு வந்து பார்த்த அவர் டேபிள் டிராயர் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
டெல்லியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கும் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகம் ‘சீல்’ வைத்து வருகிறது. இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்த ஒரு வீட்டின் பூட்டை மாநில பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி நேற்று உடைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. இது குறித்து மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.க்கு பிறகு, தற்போது ‘சீல்’ வைக்கப்பட்டவற்றையும் பா.ஜனதா அழித்து வருகிறது என்று தெரிவித்தார்.
பா.ஜனதா ஆளும் மாநகராட்சிகள் சார்பில் காலையில் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படுவதும், மாலையில் அந்த கட்சியினரே அதை உடைப்பதும் நடந்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், மாநில மக்களை முட்டாள்கள் என பா.ஜனதாவினர் நினைக்கிறார்களா? என கேள்வியும் எழுப்பினார். இத்தகைய ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாக்க தவறிய மனோஜ் திவாரி உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #BJP #ManojTiwari #BreakingLock