என் மலர்

  நீங்கள் தேடியது "Chief Manoj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்த ஒரு வீட்டின் பூட்டை மாநில பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி நேற்று உடைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #ManojTiwari #BreakingLock
  புதுடெல்லி:

  டெல்லியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கும் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களை மாநகராட்சி நிர்வாகம் ‘சீல்’ வைத்து வருகிறது. இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்த ஒரு வீட்டின் பூட்டை மாநில பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி நேற்று உடைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இது தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. இது குறித்து மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.க்கு பிறகு, தற்போது ‘சீல்’ வைக்கப்பட்டவற்றையும் பா.ஜனதா அழித்து வருகிறது என்று தெரிவித்தார்.

  பா.ஜனதா ஆளும் மாநகராட்சிகள் சார்பில் காலையில் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படுவதும், மாலையில் அந்த கட்சியினரே அதை உடைப்பதும் நடந்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், மாநில மக்களை முட்டாள்கள் என பா.ஜனதாவினர் நினைக்கிறார்களா? என கேள்வியும் எழுப்பினார். இத்தகைய ‘சீல்’ வைக்கும் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாக்க தவறிய மனோஜ் திவாரி உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.  #BJP #ManojTiwari #BreakingLock
  ×