search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்த -எம்.எல்.ஏ. பேச்சு
    X

    தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஒரு மாணவிக்கு சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம்.

    கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்த -எம்.எல்.ஏ. பேச்சு

    • தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக எம்.எல்.ஏ. பேசினார்.
    • ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் காமராஜர் மேல் நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் மேல் நிலை பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்,ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் யூனியன் தலைவர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்க ளை வழங்கினர்.

    விழாவில் தங்கப்பா ண்டியன் எம்.எல்.ஏ. பேசும் போது,எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. அத்தகைய கல்விக்கு நமது தமிழக முதல்வர் முக்கியத்தும் கொடுத்து வருகிறார். அவர் கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    இந்த திட்டங்களை முறையாக பயன்படுத்தி மாணவ- மாணவியர்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பாக கல்வி கற்று ராஜபாளையம் தொகுதியிலிருந்து ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மருத்துவர் போன்ற உயரிய பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் வரவேண்டும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து பேசிய எம்.பி தனுஷ் எம்.குமார் பேசும் போது, மற்ற மாநிலத்தைக்

    காட்டிலும் நமது தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டமே என்றும், மாணவ- மாணவியர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பாலாஜி நாடார், தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் காமராஜ், கிளை செயலாளர் லட்சுமணன், ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×