search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில் பாதை பலப்படுத்தும் பணி தீவிரம்
    X

    ெரயில் பாதை பலப்படுத்தும் பணி தீவிரம்

    • ராஜபாளையம் பகுதியில் ெரயில் பாதையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 60 கிலோ எடை உடைய கான்கிரீட் கட்டைகளில், 52 கிலோ தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- சங்கரன் கோவில் பிரிவில் 5 கி.மீ. தொலைவுக்கு ெரயில் பாதையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கரிசல்மண் பகுதியான இந்தப்பகுதியில் 60 கிலோ எடை உடைய கான்கிரீட் கட்டைகளில், 52 கிலோ தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கரிசல் மண் அமைப்பு கோடைகாலத்தில் சுருங்கும், மழைக்காலத்தில் விரிவடையும் தன்மை கொண்டது. இதனால் அந்த பகுதியில் ெரயில்களை 100 கி.மீ. வேகத்தில் இயக்க முடியவில்லை. எனவே அந்தப் பகுதியில் ெரயில் பாதை பலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் செம்மண் நிரப்பப்படும்.

    அதன் மேல் சரளை கற்களுடன் கூடிய ெரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக நண்பகல் நேரத்தில் இயக்கப்படும் மதுரை - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை - மதுரை ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. தற்போது ஒரு கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்து விட்டன. மீதம் உள்ள பகுதிகளில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

    Next Story
    ×