என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் யூனியனில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
- இந்த பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவி லைக்கடையையும், சிவஞானபுரம் ஊராட்சி சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள கட்டிட புதுப்பித்தல் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பெரியபேராலி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.27.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரிய பேராலி ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
15-வது நிதிக்குழு சுகாதார நிதியின்கீழ் பெரிய பேராலி ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மைய கட்டடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- விருதுநகர் அருகே தனியார் நிறுவன டிரைவர் மாயமானார்.
- வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி தாயில்பட்டி அருகே உள்ள தச்சையாபுரத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (வயது 27). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காளிராஜின் மனைவி மாரீஸ்வரி வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.5 கோடி மதிப்பில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைய உள்ளது.
- பண்ணை கட்டுவதற்காக மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பிளவக்கல் அணை பகுதி யில் ஏற்கனவே மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. மேலும் விருதுநகர் மாவட்ட மீன் விரலிகள் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக வெம்பக்கோட்டை அணை பகுதியில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட உள்ளது.
இந்த பண்ணையில் இருந்து பண்ணை குட்டை விவசாயிகள் மற்றும் கண்மாய் ஏலதாரர்கள் ஆகி யோருக்கு அரசு நிர்ணயித்த குறைந்த விலையில் (ஒரு மீன் குஞ்சு 30 பைசா முதல் 75 பைசா வரை) மீன் விரலிகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம் ஆண்டிற்கு 15 லட்சம் மீன்விரலிகள் உற்பத்தி செய்து விருதுநகர் மாவட்ட நீர்நிலைகளில் இருப்பு செய்து உள்நாட்டு மீன்வளத்தை பெருக்க முடியும்.
அதன்படி ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை கட்டுவதற்காக மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
வெம்பக்கோட்டை அணையில் மீன் பிடிக்கும் 5 மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரிய நுண்ணறி அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்கு னர் (மண்டலம்) உதவி இயக்குனர், கட்டுமான பிரிவு பொறியியல் துறை (மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு) மற்றும் வருவாய்த்துறை அலுவலர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.80 லட்சம் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டது.
- சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வி.ஏ.30 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கங்கள், நகர வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் தொடக்க நிகழ்வாக 8 பேருக்கு ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் முதல் கடன் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்-மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினர்.
அப்போது சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- இலவச கல்வி திட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அலுவலர் கூறினார்.
- நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பள்ளியின் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத மாணவர்களைச் சேர்ப்பதற்கு 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர்சேர்க்கை 20.04.2023 முதல் 18.05.2023 வரை இணைய வழியில் நடைபெற உள்ளது.
பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையமுகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் குழந்தை யின் வயது 31.7.2023 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 4 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
அதாவது 1.8.2019 முதல் 31.7.2020-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏதேனும் 5 பள்ளி களுக்கு விண்ணப்பி க்கலாம்.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தை களை சேர்ப்பதற்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கு வதற்காக அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும் உதவி மையம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணையவழி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
உதவி மைய ஆலோ சகர்களாக கோபால், மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் (கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்) தொலைபேசி எண் 76399 54011 நியமனம் செய்யப்ப ட்டுள்ளார். உதவி வேண்டு வோர் அலுவலக நேரங்க ளில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை நடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகரி காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அருள் அன்பரசு (வயது 39). இவர் கோவையில் சொந்த மாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அங்குள்ள காந்தி நகர் விடுதியில் இருந்து பேசிய வாலிபர் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று கூறி யுள்ளார். அதன்படி ரூ. 8000 வாடகை பேசி அருள் அன்பரசு அந்த வாலிபரை சென்னை ஆலந்தூரில் இறக்கிவிட்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் தான் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் பேசிய வாடகை பணத்தை விட கூடுதலாக ஆயிரத்தை சங்கர் கொடுத்ததாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்ட சங்கர் 11 பவுன் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்திற்கு ஏலம் வருவதாகவும், அதனை வாங்கிக் கொள்ளு மாறும் அருள் அன்பரசு விடம் கூறியுள்ளார். அவரும் கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதி மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை திரட்டி உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு அருள் அன்பரசு விடம் சங்கர் கூறியுள்ளார். அங்கு 2 பேரும் சந்தித்து பேசினர். அப்போது விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடி அறையில் ஏலம் நடப்பதாகவும், தான் மட்டும் சென்று நகைகளை வாங்கி வருவதாக பணத்துடன் சங்கர் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருள் அன்பரசு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஏலம் நடைபெறவில்லை என தெரியவந்தது.
உடனே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து பார்த்தபோது சங்கர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் அன்பரசு 2 லட்சத்து 62 ஆயிரம் திருடு போனது தொடர்பாக சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.
- இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மீனா (வயது 38). கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகன் கணீஷ் பாண்டியுடன் (19) வசித்து வந்தார்.
கணீஷ் பாண்டி அதே பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று தாய், மகனிடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கணீஷ் பாண்டி மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது ம னைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார் பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் பொன்னுச்செல்வி (18). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மேற்கொண்டு படிக்காமல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றார். ஆனால் பெற்றோர் படிக்குமாறு கூறியுள்ளனர்.நேற்றும் இது தொடர்பாக பிரச்சினை இருந்தது.
இதனால் விரக்தி அடைந்த பொன்னுச்செல்வி நள்ளிரவு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விஜய்-கலையரசி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைத்து கடந்த 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.
- திருமணத்திற்கு விஜய்யின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). பட்டதாரியான இவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பரமேஸ்வரன்-மகேஸ்வரி தம்பதியின் மகள் கலையரசி(19) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
பெண்ணின் பெற்றோர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் பணியாற்றி வருகின்றனர். கலையரசியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜய் மீதான காதலை கைவிடுமாறு எச்சரித்தனர். ஆனால் விஜய்-கலையரசி காதல் நீடித்தது.
இந்த நிலையில் கலையரசிக்கு உசிலம்பட்டியில் வைத்து உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக கலையரசி வலுக்கட்டாயமாக உசிலம்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் இந்த திருமணத்தில் விருப்பமில்லாத கலையரசி அங்கிருந்து தப்பி காதலன் விஜயிடம் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து விஜய்-கலையரசி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு விஜய்யின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பின் ராஜபாளையத்தில் காதல் ஜோடி தங்கினர். மகள் காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் பரமேஸ்வரன்-மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் அடிக்கடி தொலைபேசி மூலம் கலையரசிக்கு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சல் அடைந்தார்.
நேற்று மாலை கலையரசியிடம் செல்போனில் பேசிய அவரது தந்தை பரமேஸ்வரன் இன்று இரவு விஜய்யை கொன்று விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கலையரசி இனிமேல் நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என கணவர் விஜய்யிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர்களை உறவினர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணமான 15 நாளில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகரில் உள்ள அரசு மருத்துவ கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகள் தப்பின.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள சாத்தூர் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட மருத்துவ கிட்டங்கி உள்ளது. இங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன.
இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு மருந்து -மாத்திரை கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ கிட்டங்கி பின்புறம் மருந்து அட்டை பெட்டிகள் குவிந்து குப்பைகளாக காட்சி யளிக்கிறது.
இந்த காலி அட்டை பெட்டி குவியலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் போராடி தீயை அணைத் தனர்.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மருத்துவ கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மருந்துகள் தப்பின. இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மருத்துவ கிட்டங்கியின் பின்புறம் காலி அட்டை பெட்டி உள்ளிட்டவை குப்பை களாக தேங்கி கிடக்கின்றன. இதனால் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் கிட்டங்கி வளாகங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- விருதுநகரில் வருகிற 21-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- வரலாற்று சின்னங்களை பார்க்க பாரம்பரிய மரபு பயணத்தில் பொதுமக்களுடன் கலெக்டர் இணைந்து பங்கேற்றார்.
- தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வர லாற்று சின்னங்களை காண்ப தற்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து இந்த பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இந்த ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தில் மூவரை வென்றான் பகுதியில் உள்ள 800 ஆண்டு பழமையான இடைக் கால பாண்டியர் காலத்து மலைக்ழு கொழுந்தீசுவரர் குடைவரை கோவில் அங்குள்ள கல்வெட்டுகளில் முதலாம் மாரவர்ம சுந்தரப்பண்டிய முடிசூட்டு விழாவின் செய்திகள் இடம்பெற்றுள்ளதையும், அதற்கு பின் ஆண்ட குலசேகர பாண்டியனின் ஆட்சி காலத்தில் காரான்மை கானியாக 10 பேருக்கு தானமாக வழங்கிய செய்தி யையும் கலெக்டர் மற்றும் பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
குன்னூரில் உள்ள ஏறத்தாழ 2ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று ரீதியாக ஒரு குழுத்தலைவன் அல்லது சமூக தலைவன் மரண மடையும் போது நினைவுச் சின்னமாக எழுப்பப்படும், சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட சுமார் 20 அடி உயரமுள்ள நெடுங்கல் உள்ள தையும், கிருஷ்ணன்ே ேகாவில் மலை அடிவாரத்தில் சிதைந்த நிலையில் உள்ள உடைந்த முதுமக்கள் தாழி ஓடுகள், தாழியுடைய வாய் விழிம்புகள், சிறு மண்பாண்ட ஓடுகளையும் பார்வையிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை சாலையில் திருமலை நாயக்கர் காலத்தில் பயணமாக செல்லும் பொதுமக்கள் தங்கு வதற்காக கலைசிற்பங்களுடன் கட்டப்பட்ட கல்மண்டபம், மன்னர் தங்குவதற்காக கட்டப்பட்ட தங்கும் விடுதி கட்டடத்தையும், கி.பி. 1623 முதல் கி.பி. 1659 வரை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், ஆண்டாள் கோவி லுக்கு வரும் போது தங்கு வதற்காக வட்டவடிவிலான முற்றம், அலங்காரங்கள், ஓவியங்களுடன் கட்டப்பட்ட பிரமாண்ட அரண்மனை, பின்னர் 19-ம் நூற்றாண்டில் நீதிமன்றமாக செயல்பட்ட வரலாற்று சின்னங்களையும் பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த சுற்றுலா மூலம் மாவட்டத்தில் உள்ள தொன்மையான, பாரம்பரியம் மிக்க இடங்களை வெளிக் கொணர்ந்து உலகறிய செய்வதே நோக்கம் என்று கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
இந்த பயணத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அன்பரசன் உட்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சிவகாசி மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
- தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.
சிவகாசி
சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 16 நாட்கள் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். தேரோட்டம் நடந்தது. கொடி இறக்கி கடைசி திருவிழா நடந்து முடிந்ததை தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாக தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மாரியம்மன் அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.






