என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.5 கோடி மதிப்பில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை
- ரூ.5 கோடி மதிப்பில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைய உள்ளது.
- பண்ணை கட்டுவதற்காக மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பிளவக்கல் அணை பகுதி யில் ஏற்கனவே மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. மேலும் விருதுநகர் மாவட்ட மீன் விரலிகள் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக வெம்பக்கோட்டை அணை பகுதியில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட உள்ளது.
இந்த பண்ணையில் இருந்து பண்ணை குட்டை விவசாயிகள் மற்றும் கண்மாய் ஏலதாரர்கள் ஆகி யோருக்கு அரசு நிர்ணயித்த குறைந்த விலையில் (ஒரு மீன் குஞ்சு 30 பைசா முதல் 75 பைசா வரை) மீன் விரலிகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம் ஆண்டிற்கு 15 லட்சம் மீன்விரலிகள் உற்பத்தி செய்து விருதுநகர் மாவட்ட நீர்நிலைகளில் இருப்பு செய்து உள்நாட்டு மீன்வளத்தை பெருக்க முடியும்.
அதன்படி ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை கட்டுவதற்காக மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
வெம்பக்கோட்டை அணையில் மீன் பிடிக்கும் 5 மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நல வாரிய நுண்ணறி அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்கு னர் (மண்டலம்) உதவி இயக்குனர், கட்டுமான பிரிவு பொறியியல் துறை (மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு) மற்றும் வருவாய்த்துறை அலுவலர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.