என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் மாயம்"

    • நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.
    • 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த பெரியப்பட்டுபகுதியைச் சேர்ந்த அன்பரசன் (வயது 36). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருக்கு பாணுப்பிரியா (29) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். நெல் அறுவடை நடக்கும் பகுதியிலேயே தங்கி பணி செய்து விட்டு, 15 தினங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூர் பகுதிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். பின்னர் 10 தினங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இவரது மனைவி பாணுப்பிரியா நெல் அறுவடை இயந்திர உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் வேலைக்கு வரவில்லை என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாணுப்பிரியா திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே தனியார் நிறுவன டிரைவர் மாயமானார்.
    • வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     விருதுநகர்

    சிவகாசி தாயில்பட்டி அருகே உள்ள தச்சையாபுரத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (வயது 27). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து காளிராஜின் மனைவி மாரீஸ்வரி வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46), டிரைவர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி கார் வாங்குவதற்காக கோயம்புத்தூர் சென்றார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி அஜிதாரராணி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    ×