search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை
    X

    கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை

    • கார் டிரைவரிடம் நூதனமாக பேசி ரூ. 2.50 லட்சம் கொள்ளை நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நகரி காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அருள் அன்பரசு (வயது 39). இவர் கோவையில் சொந்த மாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று அங்குள்ள காந்தி நகர் விடுதியில் இருந்து பேசிய வாலிபர் சென்னைக்கு செல்ல வேண்டுமென்று கூறி யுள்ளார். அதன்படி ரூ. 8000 வாடகை பேசி அருள் அன்பரசு அந்த வாலிபரை சென்னை ஆலந்தூரில் இறக்கிவிட்டுள்ளார்.

    அப்போது அந்த வாலிபர் தான் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த சங்கர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் பேசிய வாடகை பணத்தை விட கூடுதலாக ஆயிரத்தை சங்கர் கொடுத்ததாக தெரிகிறது.

    சில நாட்களுக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்ட சங்கர் 11 பவுன் ரூ. 2 லட்சத்து 62 ஆயிரத்திற்கு ஏலம் வருவதாகவும், அதனை வாங்கிக் கொள்ளு மாறும் அருள் அன்பரசு விடம் கூறியுள்ளார். அவரும் கூடுதல் லாபம் கிடைக்கும் என கருதி மனைவியின் நகைகளை அடகு வைத்து பணத்தை திரட்டி உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு அருள் அன்பரசு விடம் சங்கர் கூறியுள்ளார். அங்கு 2 பேரும் சந்தித்து பேசினர். அப்போது விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2-வது மாடி அறையில் ஏலம் நடப்பதாகவும், தான் மட்டும் சென்று நகைகளை வாங்கி வருவதாக பணத்துடன் சங்கர் சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருள் அன்பரசு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஏலம் நடைபெறவில்லை என தெரியவந்தது.

    உடனே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்து பார்த்தபோது சங்கர் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்வது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள் அன்பரசு 2 லட்சத்து 62 ஆயிரம் திருடு போனது தொடர்பாக சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×