என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகாசி மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
- சிவகாசி மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
- தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.
சிவகாசி
சிவகாசியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 16 நாட்கள் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தினர். தேரோட்டம் நடந்தது. கொடி இறக்கி கடைசி திருவிழா நடந்து முடிந்ததை தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாக தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் மாரியம்மன் அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்பத்தை 11 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். தெப்ப உற்சவத்துடன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.
Next Story






