என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கிடங்கு"

    • விருதுநகரில் உள்ள அரசு மருத்துவ கிட்டங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகள் தப்பின.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள சாத்தூர் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட மருத்துவ கிட்டங்கி உள்ளது. இங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர் காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன.

    இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு மருந்து -மாத்திரை கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ கிட்டங்கி பின்புறம் மருந்து அட்டை பெட்டிகள் குவிந்து குப்பைகளாக காட்சி யளிக்கிறது.

    இந்த காலி அட்டை பெட்டி குவியலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் போராடி தீயை அணைத் தனர்.

    உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மருத்துவ கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மருந்துகள் தப்பின. இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மருத்துவ கிட்டங்கியின் பின்புறம் காலி அட்டை பெட்டி உள்ளிட்டவை குப்பை களாக தேங்கி கிடக்கின்றன. இதனால் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    எனவே இனிவரும் காலங்களில் கிட்டங்கி வளாகங்களில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×