search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்
    X

    விருதுநகர் யூனியன் பெரியபேராலியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்

    • விருதுநகர் யூனியனில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவி லைக்கடையையும், சிவஞானபுரம் ஊராட்சி சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள கட்டிட புதுப்பித்தல் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    பெரியபேராலி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.27.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரிய பேராலி ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    15-வது நிதிக்குழு சுகாதார நிதியின்கீழ் பெரிய பேராலி ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மைய கட்டடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×