என் மலர்
விருதுநகர்
- மனோஜ்குமார் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டார்.
- மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பிளஸ்-1 படித்து வந்தார். அவரும், தாதப்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது22) என்பவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும். பிளஸ்-2 படிப்பதற்கு மாணவியை அனுப்பவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த மனோஜ்குமார், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டார். வீடு திரும்பிய பெற்றோர், தங்களின் மகளை காணாமல் பல்வேறு இடங்களில் தேடினர். அன்று இரவு முழுவதும் மாணவி வரவில்லை.
நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மனோஜ்குமார் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
- பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்தது வந்தது.
- விபத்தில் சம்பவ நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணைைய சேர்ந்தவர் கேசவன் (வயது 50). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கங்கரக்கோட்டை ஊராட்சி மார்க்கநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது.
இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன. இந்த பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்தது வந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.
அந்த அறையில் வேலை பார்த்து கொண்டிருந்த மார்க்கநாதபுரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவி ஜெயசித்ரா (24) விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் சம்பவ நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கங்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதில் பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த 31.3.2023 அன்று முடிவடைந்து விட்டதாகவும், இந்த விபத்துக்கு உரிமையாளர் கேசவன், போர்மேன் முனியசாமி ஆகியோர் உரிய பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதுதான் காரணம் என்று தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மீது ஏழாயிரம் பண்ணை போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆலை உரிமையாளர் கேசவன், போர்மேன் முனியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளிகள் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்களாக விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிற னாளிகள் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதிகள் பெற்றி ருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியத்துடன் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத் தொழில் பிரிவின் கீழ் ரூ. 5 லட்சம் வரையிலும் கடனு தவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவை யில்லை.
மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.500 லட்சம் வரை மேலும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு வரையில் அதிகபட்சமாக ரூ.17.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது, மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மான்யமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்குத் தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DICஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
- கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காளையார்கரிசல் குளத்தை அடுத்துள்ள பொம்மக்கோட்டையை சேர்ந்தவர் பிச்சை(வயது70). சோடா கம்பெனி நடத்தி வந்த இவர், தொழில் விருத்தி காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலரிடம் 20 பவுன் நகையை அடகு வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றார்.
தவணை முறையில் மாதந்தோறும் பணத்தை கட்டி வந்த ராமர் ரூ.12 லட்சம் வரை செலுத்தியபின் நகையை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டுமென கட்டாயப் படுத்தி உள்ளனர். ஆனால் ராமர் பணம் தர முடியாது என மறுத்து விட்டார்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 3 முறை புகார் மனு அளித் துள்ளார். திருச்சுழி, அருப்பு க்கோட்டை துணை சூப்பிரண்டு அலுவலகங்க ளிலும் புகார் அளிக்கப் பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த ராமர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து காப்பாற்றி னர். மேலும் புகார் மனு தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை. ராமர் தனது கோரிக்கையை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
கந்துவட்டி புகார் தொடர்பாக 70 வயது முதியவர் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அலைகழிக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்க ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுபோன்ற மெத்தனம் காரணமாக பாதிக்கப்பட்ட வர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வாய்ப்பு உண்டு. திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த நாகலட்சுமி என்பவரின் புகாரை போலீசார் உரிய நேரத்தில் விசாரிக்காமல் மெத்தனம் காட்டியதால் அவர் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே யுள்ள வடக்கு ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது55). இவரது மகன் சீனிவாசன் கோவையில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
குடும்ப தேவைக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திடம் சாந்தி ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. இதுவரை ரூ.1 லட்சம் செலுத்தியிருந்த சாந்தி அதன் பின் சரியாக தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று சாந்தி வீட்டில் நிதி நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை யில் இருந்த சாந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சாந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சிக்கு கடந்த 2008-09-ம் ஆண்டு குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிதியை அரசு ஒதுக்கியது. இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் விதிமுறைகளை மீறி நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விருது நகரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றத்திடம் புகார் அளித்தார். இதனை விசாரித்த உள்ளாட்சி அமைப்பு மன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரி களுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் விருதுநகர் நகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் 8பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இது தொடர்பாக பாண்டுரங்கன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு போலீஸ் சூப்பி ரண்டு 8வாரங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நடவ டிக்கை எடுக்காத விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு கடந்த 13-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முன் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.
- மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி அருகே உள்ள சக்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற தொழிலதிபரை கடத்தி மிரட்டிய புகார் தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன் (வயது 52), தங்கமுனியசாமி(30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ரவிசந்திரன் (53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராஜேந்திரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் ஆகிய 6 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ராஜ வர்மன், தங்கமுனியசாமி, ரவிச்சந்திரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரியப்பன் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி(பொறுப்பு) பூர்ண ஜெய ஆனந்த் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- சாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சமரச கூட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் எட்டூர் வட்டம் பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடியின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூய்மைப் படுத்தப்படாமல் உள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வாய்க்காலில் கால்நடைகள் விழுந்து இறந்து பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் கால்வாயை சுத்தப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடனான சமரச கூட்டம் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஐயப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அரசு அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். அப்போது வாய்க்காலை சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- விருதுநகர் அருகே கோரிக்கை அட்டை அணிந்து அமைச்சு பணியாளர்கள் பணியாற்றினர்.
- 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் இந்த போராட்டம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் உள்ள 11-வது பட்டாலியனில் பணியாற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்புரம் காவல் ஆணையரகம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
காவல்துறை குடியிருப்புகளில் அமைச்சு பணியாளர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19, 20, 21-ந்தேதி ஆகிய 3நாட்கள் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடந்தது.
நேற்று 11-வது பட்டாலியனில் கிளை தலைவர் கண்காணிப்பாளர் பாலா, செயலாளர் முருகானந்தம் தலைமையில் 35அமைச்சு பணியாளர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
- ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
- சட்டசபையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
ராஜபாளையம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் பேசியதாவது:-
முருகனின் அறுபடை வீடுகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலா துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலா வெளிநாட்டவர்களுக்கும், வெளிமாநிலத்தவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் புதுமையாக இருக்கும்.
இதுபோல் ராமேசுவரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோவில் போன்ற மிகச்சிறப்பு மிக்க கோவில்களுக்கு ஒவ்வொரு ஊரிலிருந்தும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.
சுற்றுலா துறையின் மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்து மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 53 தமிழ்நாடு ஓட்டல்களை முறையாக பராமரித்து தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்.
அனைத்து சுற்றுலா தலங்களிலும் தகவல் மையம் அமைக்க வேண்டும். அதிக பயணிகள் வரும் இடங்களை கண்டறிந்து, அரசு அவற்றிற்கு சுற்றுலா மையம் என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
ஒரு சுற்றுலா தலத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு நேரடி பஸ் வசதி இருக்க வேண்டும். மலை, கடல் போன்ற ஆபத்தான பகுதிகளில் உயிர் காக்கும் மருத்துவ வசதி உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும். இதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம். சுற்றுலா துறையும் மேம்படும். நமது கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியும் வளர்ச்சி அடையும்.
ராஜபாளையம் தொகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் அணைப்பகுதியையும், சஞ்சீவி மலையையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். மேலும் அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்.
ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக தென்காசி ரோடு வரையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் அரியவகை மரங்கள், செடிகள் கருகின.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அண்மையில் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, சிறுத்தை, புலிகள், சருகுமான்கள், புள்ளி மான்கள், மிளாமான்கள் போன்றவை அதிகளவில் உள்ளன.
இங்குள்ள பேய் மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மலையில் உள்ள பெரும்பாலான இடங்கள் வறண்டு காணப்படுகிறது. வனவிலங்குகளும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பேய் மலையில் உள்ள மொட்டை என்ற இடத்தில் இடி, மின்னல் தாக்கியது. இதனால் அங்கிருந்த காய்ந்த மரங்கள் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த மரம், செடி, கொடிகளிலும் தீ பரவ தொடங்கியது.
இதைப்பார்த்த மலைவாழ் மக்கள் உடனே விருதுநகர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு விரைந்து வந்த வனத்துறையினர் தீவிபத்து நடந்த பகுதிக்கு சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்து மலையில் இருந்த அரியவகை மரம், செடி, கொடிகள் கருகின.
- விருதுநகர் அருகே சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
- இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது55), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக உலகநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சங்கரன்கோவில் முக்குரோடு பகுதியில் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உலகநாதனின் மகன் முத்துவேல் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






