என் மலர்
விருதுநகர்
- புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
- வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் புதுப்பாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி பொங்கல் விழா ராஜூக்கள் சமூகத்தினர் சார்பில் கடந்த 9-ந் தேதி சிறப்பாக நடந்தது.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு சமூகத்தினர் இணைந்து சிறப்பாக கொண்டாடும் சித்திரை பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சுவாமி அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சா ரியார்கள் அலங்கரிக் கப்பட்ட கம்பத்தில் திரு விழா கொடியேற்றினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடி யேற்றம் தொடங்கியது முதல் ஒவ்வொரு சமூகத்தி னற்கு ஒரு திருவிழா என 11 நாட்கள் திருவிழா நடை பெறும். வருகிற 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடை பெறுகிறது.
திருவிழாவில் புதுப் பாளையம் மாரியம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் ஆராதனைகள் செய்யப் பட்டு அம்மன் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம், பூத வாகனம், தண்டியல் தட்டு சப்பரம் உள்ளிட்ட வாக னங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா தலைமையில் அறங்காவலர் குழு ரமேஷ்ராஜா,ராம்ராஜ்ராஜா,ஜெய்குமார்ராஜா, கார்த்திக்ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விருதுநகர் கலெக்டர் புத்தகம் வழங்கினார்.
- வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நல விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கலெக்டர் ஜெயசீலன் 100 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். புத்தகம் ஒரு மனிதனை மேன்மையாக்குகிறது. புத்தகம் படிப்பதன் மூலம் அறிவு மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் சிங்கராஜ், முதல்வர் வெங்கடேசுவரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பூமாரி(வயது27). இவரது கணவர் தங்கபாண்டி, இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
மனைவியில் நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கபாண்டி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த பூமாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன்(38). இவரது மனைவி புவனேசுவரி. இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது. மாரீசுவரன் மது பழக்கத்திற்கு அடிமையானார்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த மாரீசுவரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(63). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கருப்பசாமி வீட்டிற்கு போன் செய்து திருவண்ணாமலை ரோட்டில் உள்ள செங்கல் சூளை அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவருடைய உடல் சவக்கிடங்கில் உள்ளதாகவும், அது கருப்பசாமியா? என்பதை உறுதிப்படுத்துமாறும் தகவல் அளித்தனர்.
உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அது கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கலா ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜேந்திரபாலாஜியின் தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சிவகாசி
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம் ஆச்சாரி உடல்நல குறைவால் கடந்த 17-ந் தேதி காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியின் இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து ஆறுதல் தெரிவித்தார். கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, காமராஜ், ராஜலட்சுமி, இன்பத்தமிழன், மருதுசேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மான்ராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கடையநல்லூர் எம்.எல்.ஏ. குட்டியப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.க சந்திரபிரபா, எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவசாமி.
விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
- நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்களால் தாக்கினர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாறு அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது.
இந்த கடையில் பூமிநாதன், முத்துக்கருப்பன், நாராயண சாமி, பெருமாள்ராஜ் ஆகி யோர் விற்பனையாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். மேற்பா ர்வையாளர்களாக செந்தில், மாரியப்பன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை மூடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். அதனை தடுக்க முயன்ற பூமி நாதனை அரிவாளால் வெட்டினர்.
மேலும் விற்பனையா ளர்கள் நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்க ளால் தாக்கினர்.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியரிடம் இருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள், அரை பவுன் மோதிரம் ஆகிய வற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த கடை ஊழியர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுபற்றிய புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி னர்.
மேலும் கடை செயல்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய நபர்களை போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.
- மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் வள்ளியம்மாள்(65). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். இவரது மகன் மாரிசெல்வம். சம்பவத்தன்று வள்ளியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாரிசெல்வம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக அவனை தேடுகிறீர்கள் என வள்ளியம்மாள் கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் வைத்திருந்த அரிவாளால் வள்ளியம்மாளை வெட்டி விட்டு தப்பி சென்றனர். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகார் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.
- மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது பள்ளிமடம் கிராமம். இந்த கிராமத்திற்கு வெளியே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் பள்ளி மடத்தை சேர்ந்த பூமிநாதன் (வயது 49), பச்சேரியை சேர்ந்த முத்துகருப்பன் (45), நார்த்தம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி (48), பனையூரை சேர்ந்த பெருமாள்சாமி ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
அதே கடையில் புளியங்குளத்தை சேர்ந்த செந்தில், பச்சேரியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரும் பணிபுரிகின்றனர். திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திரு விழாக்கள் நடந்து வருகின்றன. இதனால் பள்ளிமடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த இரு நாட்களாக மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது.
நேற்றும் ஏராளமான மதுபிரியர்கள் வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். இரவில் பணி முடிந்ததும் கடை ஊழியர்கள் சென்று விட்ட நிலையில், விற்பனையாளர்கள் வசூல் பணத்தை எண்ணி வைத்து விட்டு கடையை பூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர்.
முகக்கவசம் அணிந்திருந்த அவர்கள், கடையில் உள்ள வசூல் பணத்தை தந்து விடுமாறு மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், தங்களிடமிருந்த வாளால் விற்பனையாளர் பூமிநாதனை வெட்டினர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட மற்ற விற்பனையாளர்கள் கடையை மூட முயன்றனர். அப்போது அவர்களை மர்ம நபர்கள் பீர்பாட்டிலால் தாக்கி டாஸ்மாக் கடையில் இருந்த 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மர்ம நபர்கள் தாக்குதலில் பூமிநாதன், நாராயணசாமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
காயம் அடைந்த பூமிநாதன் உள்ளிட்ட 3 பேரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் விசாரணையை துரிதப்படுத்த உத்தர விட்டார். இதையடுத்து டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளை நடந்த டாஸ்மாக் மதுக்கடையில் சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளன. அதில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
இருந்தபோதிலும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் புகுந்து விற்பனையாளர்களை தாக்கி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே திருச்சுழி தாலுகாவில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் காவலாளியை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
- பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
விருதுநகர்
பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் விருதுநகர் மாவட்டம் மேலஆமத்தூர், தாயில்பட்டி மற்றும் மேட்ட மலையில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நடந்தது.
194-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவிப்பதற்காக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின்படி தமிழக அரசு ஒரு ஆலோசனை குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.
மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) செயலாளராகவும் கொண்ட இந்த குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மேல ஆமத்தூரில் அமைந்துள்ள ராஜரத்தினம் பயர் ஒர்க்ஸ் ஒர்க்ஸ் இன்டஸ்டீரீஸ், தாயில்பட்டியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் மற்றும் மேட்டமலையில் அமைந்துள்ள சன்சைன் பயர் ஒர்க்சிலும் நடந்தது.
மேற்படி களப்பணியின் போது பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.
கருத்துக் கேட்பு கூட்ட த்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர்-மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர் மற்றும் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) ஜெ.காளிதாஸ், குழு உறுப்பினர்களான சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப். தொழிற்சங்கம் மாடசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. சமுத்திரம், சி.ஐ.டியூ.தேவா, டி.ஐ.எப்.எம்.ஏ. கண்ணன், சன் சைன் பயர் ஒர்க்ஸ் உரிமையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.
- இல்லம் தேடி கல்வி சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
- இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்காட்சியை அமைத்திருந்தனர். இதனை 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தன்னார்வலர் ஈஸ்வரி, தனது உயர் தொடக்க நிலை மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகளை கொண்டு இந்த கல்வியாண்டு முழுவதும் கற்றுக்கொண்ட அறிவியல் பாடத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சியை அமைத்திருந்தார்.
இதை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், திறந்து வைத்து பேசினார். இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை தன்னார்வலர்கள் சிவரஞ்சினி, சிவமதி, பாண்டிச்செல்வி, பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
- மத்திய அரசு பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
- விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ெஜயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 7ஆயிரத்து500 பணிக்காலி இடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3.5.2023 ஆகும்.
இந்த தேர்வுக்குரிய இலவச பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை(24-ந்தேதி) முதல் நேரடியாக நடைபெற உள்ளது.
போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக எழுதலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562-293613 அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த அரிய வாய்ப்பை விருதுநகர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாலிபர்-முதியவர் பலியாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
சிவகாசி அருகே போடுரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் ராமானுஜன் (வயது 22). இவர் மது போதைக்கு அடிமையாகி கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமானுஜம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வல்சாபுரத்தில் உள்ள தனது சித்தி சித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். இந்த நிலையில் நேற்று காலை துலுக்கன்குறிச்சி அருகில் ரோட்டோரம் நெற்றில் காயத்துடன் ராமானுஜம் இறந்து கிடந்துள்ளார்.
இதனை கண்ட மாரிச்சாமி என்பவர் ராமானுஜத்தின் தந்தை வரதராஜிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வரதராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ராமானுஜம் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதில், ராமானுஜம் மோட்டார் சைக்கிளில் ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே கீழ இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (52). இவர் சென்ற மோட்டார் சைக்கிள் திடீ ெரன பழுதாகி விட்டது. அவர் சாலையோரமாக நின்றபோது அந்த வழியாக வந்த லாரி மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த அவரது மகள் திவ்யா முனீஸ்வரி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






