என் மலர்
விருதுநகர்
- காவலாளி திடீரென இறந்தார்.
- நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் கருப்பாயூரணி வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து(33). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி நெடுகனேந்தலில் நடைபெற்ற மாமனாரின் இல்ல விழாவிற்காக சென்றார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயமுத்துவின் தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரைட்டான்பட்டி தெருவில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ரைட்டான்பட்டி பகுதியில் 30 சென்ட் இடத்தில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அதே பகுதியில் 18 சென்ட் இடத்தில் புதிதாக விடுதி கட்டுவதற்கு ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடம் குறிப்பிட்ட சமுகத்தினருக்கு சொந்தமான இடம் என்று கூறி, அங்கு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுகுறித்து 2 முறை வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்தப்பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட வந்த ஆதித்தமிழர் கட்சித்தலைவர் ஜக்கையன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து ரைட்டான்பட்டி தெருவில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விருதை வசந்தன் உள்ளிட்ட148 பேரை போலீசார் கைது செய்தனர்.
- நண்பரின் சகோதரர் என்று ஏமாற்றி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
- முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(24). சம்பவத்தன்று இவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முத்துக்குமாரின் நண்பரா ன ராஜா என்பவரின் தம்பி பேசுவதாக கூறியுள்ளார்.
அவரும், அவரது நண்பர்களும் அருகில் உள்ள விழா ஒன்றிர்க்கு வந்ததாகவும் அங்கே மது குடித்துவிட்டு கிணற்றில் குளித்தபோது நண்பர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறி உடன டியாக கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கோவில் அருகே வரும்படி அழைத்துள்ளார்.
முத்துகுமார் அவர் கூறிய இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு செல்போனில் பேசிய நபர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள அட்டைமில் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் வந்து முத்துக்குமாரை ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு முத்துகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர் கத்தியின் கீழ் பகுதியால் முத்துகுமாரை தாக்கியுள்ளார். இதையடுத்து முத்துகுமார் தனது வங்கி கணக்கு கடவுச்சொல்லை கூறியுள்ளார்.போன்பே மற்றும் ஜி-பே மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 200 எடுத்துள்ளனர்.
பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.அவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்துகுமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் இதுகுறித்து முத்துகுமார் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலகுருணை குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(36). இவர் அருப்புக்கோட்டையில் இருந்து மேலகுருணை குளத்திற்கு பஸ்சில் சென்றார். அப்போது டிக்கெட் எடுப்ப தற்காக தான் வைத்திருந்த பையில் மணிபர்சை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. அதில் 11/2 செயின் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வைத்திருந்தார். பஸ்சில் யாரோ மர்மநபர் அவரது மணிபர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இடி தாக்கி பெண் இறந்தார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தராபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது23). இவரது தாய் பொன்னுத்தாய் (50). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். நேற்று அந்தப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வேலைக்கு சென்ற தனது தாயை அழைத்து வருவதற்காக சங்கீதா சென்றார். பின்னர் பொன்னுத்தாய் மற்றும் அவருடன் வேலை பார்த்து வருபவர்களும் சேர்ந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த பொன்னுத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த சமுத்திரகனி(15), கிருஷ்ணவேணி(19), முத்துமாரி(37) மற்றும் சங்கீதா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ்குமார் (43). இவர் மழை பெய்தபோது தனது வீட்டு மாட்டு தொழுவத்தில் வைத்து பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் பசு மாடு இறந்தது. காயமடைந்த போஸ்குமாரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- பாலியல் ரீதியாக சுனில் தொந்தரவு கொடுத்ததாக பெண் டாக்டர் புகார் தெரிவித்து இருந்தார்.
- புகாரை விசாரிக்க 5 பெண் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோ கிராபராக பணியாற்றி வந்தவர் சுனில் (வயது 40). இவர் மீது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், மருத்துவ கல்லூரி டீனிடம் புகார் அளித்தார். தனக்கு பாலியல் ரீதியாக சுனில் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் பேரில், இதுகுறித்து விசாரிக்க 5 பெண் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின்பேரில் ரேடியோ கிராபர் சுனிலை பணியிடை நீக்கம் செய்து, டீன் சங்குமணி உத்தரவிட்டார்.
- பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா பள்ளியில் உலக புத்தக தினவிழா நடந்தது.
- தாம் படித்த புத்தகங்கள், அதன் மூலம் கற்றுக்கொண்ட கருத்துக்களை சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி குழுமத் தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்கள் பள்ளி நூலகம் சென்று தமக்குப்பிடித்த நாளிதழ், பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், உலக அதிசயங்கள் குறித்த புத்தகங்கை படித்தனர்.
தாம் படித்த புத்தகங்கள், அதன் மூலம் கற்றுக்கொண்ட கருத்துக்களை சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனர் ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பி. எஸ். கே. நகர் பகுதியில் உள்ள நினைவாலயத்தில் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 129-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பி. எஸ். கே. நகர் பகுதியில் உள்ள நினைவாலயத்தில் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவும், குடும்பத்தினரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். சொக்கர் கோவிலில் ராமசாமி ராஜா படத்திற்கும், நினைவு ஜோதிக்கும் பூஜைகள் நடந்தன. ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் தொழிலாளரிடம் வழங்கி தொடங்கி வைத்தார். ராம மந்திரம் இல்லம் முன்பு அமைந்துள்ள சிலைக்கு பூஜைகள் நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராம்கோ சிமெண்டு தொழிற்சாலை வளாகத்தில் ராம்கோ சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்த தானம், அன்னதானம், மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர் ஜோதி ஓட்டத்தின்போது ராம்கோ மில் தொழிலாளர்கள் ஜோதியை விருதுநகர் துலுக்கப்பட்டியில் அமைந்துள்ள ராம்கோ சிமெண்டு ஆலைக்கு கொண்டு சென்றனர். விழாவில் ராம்கோ குடும்பத்தினர்கள், மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
- வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கே. மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 28), டிரைவர். இவர் தாய் மாரிக்கனியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தாயிடம் செலவிற்காக பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த சக்திகுமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாரிக்கனி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோ ட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் கவிபாரதி புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் கவிபாரதி(28). சம்பவத்தன்று இவர் ஆமத்தூரில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். பின்னர் வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த 2 பேர் அவருடன் தகராறு செய்தனர். இதில் இருதரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கவிபாரதியை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் கவிபாரதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
- இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவகாசி அருகே உள்ள மாரனேரி திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(24). திருமணம் ஆகவில்லை. இவர் விறகு வெட்டும் வேலைக்கு சென்று வந்தார். 2022-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி டியூசன் சென்ற 5-ம் வகுப்பு மாணவிக்கு பாண்டியராஜன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பாண்டியராஜனுக்கு 3 வருடம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கலா ஆஜரானார்.






