என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் பணியிடை நீக்கம்"

    • பாலியல் ரீதியாக சுனில் தொந்தரவு கொடுத்ததாக பெண் டாக்டர் புகார் தெரிவித்து இருந்தார்.
    • புகாரை விசாரிக்க 5 பெண் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோ கிராபராக பணியாற்றி வந்தவர் சுனில் (வயது 40). இவர் மீது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், மருத்துவ கல்லூரி டீனிடம் புகார் அளித்தார். தனக்கு பாலியல் ரீதியாக சுனில் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் பேரில், இதுகுறித்து விசாரிக்க 5 பெண் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

    இக்குழுவின் பரிந்துரையின்பேரில் ரேடியோ கிராபர் சுனிலை பணியிடை நீக்கம் செய்து, டீன் சங்குமணி உத்தரவிட்டார்.

    ×