என் மலர்
விருதுநகர்
- பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் சத்தியா (வயது 27).இவரது கணவர் காளிராஜ் (30). இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சத்தியாவை கணவர் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து சத்தியா பலமுறை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் உறவினர்கள் சமாதானப்படுத்தி சேர்த்துவைத்துள்ளனர். இந்த நிலையில் கணவர் மீண்டும் தகராறு செய்ததால் சத்தியா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு வந்த காளிராஜ், சத்தியாவை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சத்தியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பகுதிநேர நியாயவிலை கடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி கம்மாப்பட்டி கிராமத்தில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடை தொடங்கப் பட்டுள்ளது. இதை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஊர் நாட்டாண்மை, பகுதிநேர நியாய விலைக்கடைக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைக்கு ஊரில் அரசு புறபோக்கு நிலம் இருக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சொந்த கட்டிடம் கட்டி தருவதாக உறுதியளித்தார்.
ராஜபாளையம் தொகுதி யில் எங்கெல்லாம் பகுதிநேர விலைக்கடை தேவைப் படுகிறதோ அங்கெல்லாம் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இந்த நிகழ்வில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பாஸ்கர், மேலாண்மை இயக்குநர் மாரீஸ்வரன், சார்பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டார வழங்கல் அலுவலர் ராம நாதன், கவுன்சிலர் அனுசுயா கண்ணன், கிளைச் செயலாளர் கிருஷ்ணசாமி, வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகாசி
சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி, சிவகாசி அர்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, சிவகாசி அர்பன், காரணேசன் பள்ளி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்கடை முக்கு, தபால் நிலையம், பராசக்தி காலனி ஆகிய பகுதிகளில் இருந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
அதேபோல் வடக்கு ரதவீதி, வேலாயுதரஸ்தா, அண்ணா காலனி, லிங்க புரம் காலனி, ராஜிவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம் காலனி, 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசநகர், பர்மாகாலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.
- சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நூற்றாண்டு விழா நடந்தது.
- தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பிரதமர், முதல்-அமைச்சர் துணை நிற்கின்றனர் என்று மத்திய மந்திரி பேசினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் தொழில் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மதுரை தென்மண்டல அஞ்சலகத்தின் ஜெனரல் வி.எஸ்.ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் தென் பகுதிகளில் சிறப்புப்பெற்ற நகரமாக சிவகாசி திகழ்கிறது. அதற்குப் பட்டாசு, தீப்பெட்டி தொழில்களின் வளர்ச்சியே காரணமாகும். இந்த தொழில்கள் வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளன. ஆ.சண்முக நாடாரின் முயற்சியால் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் 1923-ல் தொடங்கப்பட்டது. முதலில் தீப்பெட்டி தொழிலே சிவகாசி மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது.
இன்று இந்த நிறுவனம் படிப்படியாக உயர்ந்து அலுமினியத் துகள்களின் உற்பத்தி, ஆரோ வாட்டர், எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில் துறை களில் சிறப்புப்பெற்றுத் திகழ்கிறது. இந்த குழுமத்தின் முயற்சியால் காளீஸ்வரி அறக்கட்டளை நிறுவப்பட்டது. அதன்கீழ் காளீஸ்வரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
காளீஸ்வரி குழுமத்தின் கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பணிபுரிகின்றனர். வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்பா ட்டிற்கு இந்த நிறுவனங்கள் உதவிபுரிகின்றன.
காளீஸ்வரி குழுமம் அமெரிக்கா, ஜப்பான் மெக்சிகோ, கனடா, தென்ஆப்பிரிக்கா, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளது. சிவகாசியின் அடையா ளங்களாகப் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் உள்ளன.
பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் அ.பா.செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார். பெங்களூர் இஸ்ரோ யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரா சர்மா கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் சி.சண்முகநாதன் வரவேற்றார். இயக்குநர் எஸ்.சண்முக நடராஜ் நன்றி கூறினார்.
- வட்டார வளர்ச்சி அலுவலர், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- நாங்கள் சொல்லும் நபர்களை தான் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நியமிக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
விருதுநகர்
காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்தபோது காரியாபட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்த குமராண்டி, அம்மாசி, தரகனேந்தலை சேர்ந்த தங்கவேல், மச்சக்காளை மற்றும் சிலர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் சொல்லும் நபர்களை தான் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி சிவக்குமார் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலக்கரையை சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது42). இவருக்கும், உறவினர் கஞ்சம்மாள் என்பவருக்கும் சொத்து தகராறு உள்ளது. இந்த நிலையில் கஞ்சம்மாள் மகன் ராஜேஷ் கண்ணன், மாரீஸ்வரி நிலத்தில் டிராக்டரை நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை மாரீஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன், கார்த்தி, செல்வராஜ், பழனி ஆகியோர் மாரீஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி மாரீஸ்வரி சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை தேடி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவின்றி தவித்த மூதாட்டியை போலீஸ் சூப்பிரண்டு மீட்டனர்.
- கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமானது. மேலும் உணவு கிடைக்காமல் உயிருக்கு போராடிய அந்த மூதாட்டி ஒரே இடத்தில் கிடந்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று பார்த்து மூதாட்டியின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆம்புலன்சு மூலம் மூதாட்டியை மீட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவருக்கு உதவியாக ஒரு பெண் போலீசையும் நியமித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வயது மூப்பு காரணமாக மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவரை பார்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். ெதாடர்ந்து அவரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததை பொதுமக்கள் பாராட்டினர்.
- அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 18 அலுவலர்கள் ஒரே நாளில் பல்வேறு நகராட்சிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இளநிலை உதவியாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ், மகேஸ்வரி, சக்திமுத்து, வருவாய் உதவியாளர்கள் பாக்கியலட்சுமி, மணிகண்டன், பாலமுருகன், யோகேஷ் குமார், முனியசாமி, கண்ணதாசன், அலுவலக உதவியாளர்கள் காளிமுத்து, முருகேசன், சண்முகப்பிரியா, சேக் முகமது, சதீஷ் முருகன், பாண்டி, முத்து, காளிராஜ் ஆகிய 18 பேர் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு நகராட்சிகளுக்கு ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒரே நாளில் 18 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனை புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிக மான மக்கள் தொழிலாளர்க ளாக உள்ளனர். அதனால் தான் பிற இடங்களில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டை தலைமை மருத்துவமனையாகவும், ராஜபாளையம் அதற்கு இணையான மருத்துவ மனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த காலத்தில் 18 மாவட்ட தலைமை மருத்துவ மனைகளே இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் ரூ.1,038 கோடி மதிப்பில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவ மனைகள் உருவாக்க் பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக பயனாளிகளை கொண்டு தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனுஷ்குமார் எம்.பி., சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல், நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு பிரிவு அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தங்கபாண்டி யன் தேர்தல் நேரத்தின்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என வாக்கு றுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி நடந்தது. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கைக்கு தொகுதிமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- கர்நாடக சட்டசபை தேர்தலில் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு காங்கிரஸ் புதிய பொறுப்பு கொடுத்து நியமித்துள்ளது.
- இவர் ஏற்கனவே கர்நாடக மேலிட பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்
கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமி ட்டி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு மண்டல பார்வையா ளர்களாக 5 பேரை நியமித்துள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்வகுமார் ஆகியோரும் அடங்குவர். மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏற்கனவே கர்நாடக மேலிட பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து முறையான அனுமதி பெற்று விற்பனை செய்தேன்.
- புதிய ஆலை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர்.
ராஜபாளையம்:
போலி பெட்ரோல் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு விடுதலையான ராமர்பிள்ளை ராஜபாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்து முறையான அனுமதி பெற்று விற்பனை செய்தேன். ஆனால் அது மூலிகை பெட்ரோல் அல்ல, போலி பெட்ரோல் என வழக்கு தொடரப்பட்டது.
தற்போது என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபித்துள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் விரைவில் மூலிகை பெட்ரோல் ஆலை தொடங்கப்படும். அதில் மூலிகை பெட்ரோலை தயாரித்து பொதுமக்களுக்கு லிட்டர் ரூ.15-க்கு வழங்க முடியும்.
புதிய ஆலை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர். இன்னும் 40 நாட்களில் ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சட்ட ஆலோசகர் சொக்குசாமி பாலசுப்பிரமணியன், சித்த மருத்துவர் கூடலிங்கம், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் 2 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 31). இவரது மனைவி பொன் பாண்டியம்மாள் (26). சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மகேந்திரன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் கணவரை கண்டுபிடித்து தருமாறு பொன் பாண்டியம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சின்ன அத்திகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (47). ரெயில்வே ஒப்பந்ததாரரிடம் பணி செய்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு வேலைக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து கிருஷ்ண சாமியின் மனைவி பால் பாக்கியம் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலசலிங்கம் பல்கலை கழகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
- ‘‘சைபா் செக்யூரிட்டி’’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் 2 நாட்கள் தேசியக் கலைவிழா –''ஸ்பார்க்ஸ்-23'', தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பெற்றோர்-ஆசிரியா் கழக கலந்துரையாடல் மற்றும் சைபா் செக்யூரிட்டி என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு நடந்தது. துணைத்தலைவா் சசிஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவா் நலஇயக்குநா் முத்துகண்ணன், துறைத்தலைவா் தனசேகரன் வரவேற்றனா். கலைவிழாவில் பல்வேறு கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். டிவி புகழ் இசைக் கலைஞா் கார்த்திக் தேவராஜ் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார். ''மிஸ்.திருச்சி" ஷாலினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.பேப் குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தினா். விளம்பர நடிகர் தனவிஷால், டி.ஜெ. புகழ் பிரஷ்பி நிகழ்ச்சியை நடத்தினா். ''சைபா் செக்யூரிட்டி'' என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.
பெற்றோர்-ஆசிரியா் கழக கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துரையாடினர். விழா ஏற்பாடுகளை பேராசிரியா்கள் கபிலன், பிரியா, பாலகண்ணன், சுரேந்திரன் மற்றும் ஆசிரியர் குழு, மாணவா்கள் குழுவினர் செய்திருந்தனர்.






