search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது- அமைச்சர் பேச்சு
    X

    புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் மற்றும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    புதிதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது- அமைச்சர் பேச்சு

    • தி.மு.க. ஆட்சியில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
    • அரசு மருத்துவமனை புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிக மான மக்கள் தொழிலாளர்க ளாக உள்ளனர். அதனால் தான் பிற இடங்களில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டை தலைமை மருத்துவமனையாகவும், ராஜபாளையம் அதற்கு இணையான மருத்துவ மனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த காலத்தில் 18 மாவட்ட தலைமை மருத்துவ மனைகளே இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் ரூ.1,038 கோடி மதிப்பில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவ மனைகள் உருவாக்க் பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக பயனாளிகளை கொண்டு தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனுஷ்குமார் எம்.பி., சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல், நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு பிரிவு அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    எம்.எல்.ஏ. தங்கபாண்டி யன் தேர்தல் நேரத்தின்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என வாக்கு றுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி நடந்தது. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கைக்கு தொகுதிமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×