என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் மே தினம் கொண்டாடப்பட்டது.
    • சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி முதன் முதலாக நடந்தது.

    விருதுநகர்:

    விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் மே தினம் கொண்டாடப்பட்டது. சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி முதன் முதலாக நடந்தது. இந்த நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் அந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அதனை ஏற்று 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெற பட்டதாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கார்ப்பரேட் முதலாளி அதானிக்கு காவடி தூக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும் அல்லது எப்போது நடந்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    திருமண மண்டபங்களில் மது விருந்துக்கு அனுமதி, தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை என தமிழக அரசு சில குழப்பமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவற்றை கைவிட்டு தமிழகத்தில் படிப்படியாக அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பஸ்சுக்கு தீ வைப்பதாக மிரட்டல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பராசக்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (23). இவர் சம்பவத்தன்று சின்னபேராலி ரோட்டில் பெட்ரோல் கேனுடன் அரசு பஸ்சுக்கு தீ வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் அஜித்குமாரை கைது செய்தனர்.

    • நகராட்சி அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி மேலாளர் மல்லிகா முதல்நிலை மேலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் ராஜபாளையம் நகராட்சியில் 2-ம் நிலை கணக்கராக இருந்த காளியம்மாள் முதல் நிலை கணக்கராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

    ராஜபாளையம் நகராட்சி 1 ஏ மேலாளராக இருந்த மகேஸ்வரன் முதல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.

    • அருப்புக்கோட்டையில் கனமழை பெய்தது.
    • சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

    அருப்புக்கோட்டை

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் வெள்ளம் போல் காட்சி அளித்தது. மணி நகரம், ஓடை தெரு குடியிருப்பு பகுதியில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து வெள்ளம் போல் அந்த பகுதியை சூழ்ந்தது. மழை காலங்களில் இந்த பகுதிகளில் சிறிய அளவிலான சாக்கடைகள் உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் மக்கள் வழி தெரியாமல் சாக்கடையில் விழுந்து விடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தனர்.

    நேற்று பெய்த மழையில் அங்குள்ள சாக்கடையில் விழுந்த நபரை வாலிபர் காப்பாற்றினார். 20 வருடங்களுக்கு மேலாக ஓடைகளை தூர் வாராமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஓடைகளை தூர்வாரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

    • வீடு உள்பட 3 இடங்களில் நகை-பொருட்கள் கொள்ளைபோனது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை கனி (வயது 35). இவர் சம்ப வத்தன்று வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து பிச்சைகனி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மராஜ், பால்பாண்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் அம்பேத்கர் தெருைவ சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மாவூத்து பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளர்.

    சம்பவத்தன்று வெல்டிங் பட்டறையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). இவரது வீட்டில் இருந்த 1.4 பவுன் நகை திருடுபோனது.

    இதுகுறித்து எம்.கூமாபட்டி போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதில், நகை திருடு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, சிவா, குட்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கட்டுமான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளி யங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவ ருடைய மகன் ஹரிஷ் குமார் (வயது 15). விருது நகரில் உள்ள ஒரு பள்ளி யில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

    அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருைடய மகன் ரவிசெல்வம் (17). இவர் நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஹரீஷ்குமாரும், ரவி செல்வமும், திருச்சுழி மேலேந்தல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டு மான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படு கிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஹரீஷ்குமார், ரவி செல்வம் பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்கள் உடலை உற வினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களின் உறவினர்கள் நரிக்குடி போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் கட்டிட என்ஜினீயர் நெல்லையை சேர்ந்த ஜெயசீலன் ராஜா (29), மேற்பார்வையாளர் கட்டனூரை சேர்ந்த பால்சாமி மற்றும் பரமக்குடியை சேர்ந்த விஜயராகவன் ஆகிய 3 பேைர போலீசார் கைது செய்தனர்.

    • 34 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக அதிகாரிகள்-ஊழியர்கள் இடமாற்றம் எப்போது? என குமுறல் எழுந்துள்ளது.
    • அலுவலக உதவியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக உதவியாளர்கள் 18 பேர் திடீரென பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டையில் இருந்து திருச்செந்தூர், களக்காடு, கங்கை கொண்டான், கொல்லங்கோடு உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு அலுவலக உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பணி இடமாற்றம் குறித்து அலுவலக உதவியாளர் ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் பணி யாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் எங்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாகவும் குடும்ப சூழ்நிலை ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதனை நகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்கள் மற்றும் அதிகா ரிகள் 34 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் எங்களை மட்டும் குறிப்பாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று வேதனை யுடன் தெரிவித்தார்.

    பொதுவாக அரசு பணியில் உள்ள ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வேலை பார்த்தால் அந்த நபரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வார்கள். ஆனால் இந்த நகராட்சியில் ஏன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் உள்ளனர்? புதிதாக பணியில் சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்வது என்ன நியாயம்? என்று பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள் கேள்வி விடுக்கின்றனர். எனவே இந்த இடமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட் அதிகாரிகள் மீண்டும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அலுவலக உதவியா ளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.6.89 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு பிரிவு 6 மாதத்தில் பணிகள் நிறைவடையும்.
    • வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 135 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் சராசரியாக 1,500 பேர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இங்கு 18 மருத்துவர்கள், 30 செவிலியர்கள் பணிபுரி கின்றனர். இந்த மருத்துவ மனையில் மாதம்

    300-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறு கிறது.

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, குன்னூர், எம்.புதுப்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிரா மங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக பிரசவங்கள் நடை பெறும் மருத்துவ மனைகளில் ஒன்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்க புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தை கள் சிகிச்சை பிரிவு கட்டிடம் 27 ஆயிரத்து 750 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் லிப்ட், பிரத்யேக அவசரகால வெளியேற்று சாய்தளம், ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    அறுவை சிகிச்சை மையம், உயர் சார்பு அலகு (ஹெச்.டி.யு), பச்சிளம் குழந்தைகளுக்கான இன்கு பேட்டர் வசதியுடன் சேர்த்து 100 படுக்கைகள் கொண்ட தாக மப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது. இந்த மகப்பேறு பிரிவு கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் போது ஏற்கனவே உள்ள 135 படுக்கைகளுடன் சேர்த்து 235 படுக்கை கொண்ட பிரமாண்ட மருத்துவமனையாக இருக்கும்.

    இதுகுறித்து மருத்து வர்கள் கூறுகையில், மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் போது, அதற்குரிய நவீன மருத்துவ கருவிகள், கூடுதல் மருத்து வர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டு மான பணிகள் நிறைவ டைந்துள்ளது. 6 மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருகிற ஜனவரி மாதத்தில் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் என்றனர்.

    • குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 5ன்படி, தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு தெரிவிப்பதற்காக தமிழக அரசு ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.

    அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த மாடசாமி, சி.ஐ.டியு. சார்ந்த மகாலட்சுமி, ஏ.ஐ.டியு.சி. ஜீவானந்தம், கோவில்பட்டி விஜய்ஆனந்த், அகில இந்திய சேம்பர் ஆப் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் செயலாளர் நூர்முகமது, செங்கன் மேட்ச் இன்டஸ்டிரீஸ் உரிமையாளர் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

    இந்த குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் களப்பணி சாத்தூரில் அமைந்துள்ள ஜோதி மேட்ச் ஒர்க்ஸ், மலைமகுடம் மேட்ச் ஒர்க்ஸ், சிவகாசி தாலுகா சித்துராஜபுரத்தில் உள்ள சாந்தி கலர் மேட்ச் ஒர்க்ஸ், விருதுநகர் தாலுகா சந்திரகிரி புரத்தில் அமைந்துள்ள தி பிரசிடெண்ட் மேட்ச் கம்பெனியிலும் நடந்தது.

    இந்த களப்பணியின் போது தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்கள் மற்றும் வேலை யளிப்பவர்களிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டது.

    இந்த களப்பணியில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர்-விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ், மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தர பாண்டியம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 40). இவரது மனைவி விஜி (39). இவர்கள் இருவரும் விறகு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இவரது மகன் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் கடந்த 4 நாட்களாக மழை காரணமாக முத்துசெல்வம் வேலைக்குச் செல்லவில்லை.

    இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் விஜி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது44). ஓட்டல் வைத்துள்ளார். சம்பவத்தன்று கடைக்கு சாமான் வாங்குவதற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதைத்தொ டர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சுரேஷ்கு மாரின் மனைவி காளீஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சந்திரகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராஜ். இவரது மகன் மாரீஸ்வரன் (24). இவர் ராமநாத புரத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஊருக்கு வந்து விட்டு கடந்த7-ந் தேதி மீண்டும் ராமநாதபுரம் சென்றார். ஆனால் ஜவுளி கடைக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு ள்ளது. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொ டர்ந்து ஆம த்தூர் போலீஸ் நிலையத்தில் மகனை கண்டு பிடித்து தருமாறு சங்கர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா

    ரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மறியல் செய்தனர்.
    • வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து 2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்த கல்லூரியில் 2021-22 கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு இதுவரை பருவ தேர்வுகள் நடத்தப்படவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தேர்வு எழுத அனுமதி கேட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்புள்ள வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் முத்துமாரி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 5-ந் தேதி கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதுவரை கல்லூரி வரக்கூடாது எனக்கூறி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

    ×