என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து மாரனேரி, பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன். இவரது மகள் பிரியதர்ஷினி(18). திருச்சுழியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பாராம். இதனை அடிக்கடி தாய் கண்டித்துள்ளார்.

    நேற்று காலையில் கல்லூரிக்கு செல்லும்போது செல்போனை பார்த்தபடி பிரியதர்ஷினி சென்றுள்ளார். இதனால் தாய் அவரை திட்டியுள்ளார். இந்த மாலை வீடு திரும்பிய பிரியதர்ஷினி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரிபேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஆலங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தேவராஜ்(58) இவரது மனைவி செல்வி (52). இவர்களுக்கு காவியா என்ற மகளும், தங்கேசுவரன் என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. காவியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    வீட்டின் கீழ் பகுதியில் தேவராஜூம், மாடியில் தங்கேசுவரன் தனது மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காவியாவை கணவர் வீட்டுக்கு அனுப்புமாறு செல்வியிடம் சங்கீதா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வி அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    அதை பார்த்த காவியா அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(50). இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜ்குமாரின் மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருடப்பட்டது.
    • இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சமுத்திரவள்ளி(வயது48). இவர் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் தனது நகையை அடகு வைத்திருந்தார்.

    நேற்று அந்த நகையை மீட்டுக்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். பின்னர் சத்திரப்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி வீடு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்தபோது நகை வைத்திருந்த மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. அதில் ரூ.7ஆயிரம் ரொக்கமும் இருந்தது. பஸ்சில் யாரோ மர்ம நபர் கட்டைப்பையில் வைத்திருந்த மணிபர்சை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சமுத்திரவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டு தலின்படியும் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று (மே-1) விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தொழிலாளர் தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

    விடுமுறை அளிக்கப் படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனும திக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலை யளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழி லாளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று விடுமுறை தினத்திற்கு 24மணிநேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை அனுச ரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழி லாளர்களை பணிக்கு அமர்த்திய 45கடைகள் மற்றும் நிறுவனங்கள், 21 உணவு நிறுவனங்கள், 2மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 68 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • சிவகாசியில் சிவமுருகன் என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்துக்கு 3 பேர் வந்து அதிகாரிகள்போல் நடித்து பணம் கேட்டனர்.
    • அதிகாரிகள்போல் நடித்து உடற் பயிற்சி கூடங்களில் பணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் ஏராளமான உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஏராளமானோர் உறுப்பினர்களாக இருந்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

    தனியார் உடற்பயிற்சி கூடங்களுக்கு கட்டணம் மூலம் அதிக வருமானம் வருவதால் அதிகாரிகள்போல் நடித்து ஒரு கும்பல் உடற்பயிற்சி கூடங்களில் அரசின் விதி முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை. எனவே உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என மிரட்டி பண வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தும் உரிமையாளர்களிடம் உரிமம் உள்ளதா? பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பதற்குண்டான சான்றிதழ் பெற்றுள்ளனரா? உடற் பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்களுக்கு சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறதா? முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி மோசடி கும்பல் அதிகாரிகள் போர்வையில் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

    அந்த கும்பல் உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர்கள் முறையாக பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்போவதாக மிரட்டி ஒவ்வொரு உடற்பயிற்சி கூடம் நடத்தும் உரிமையாளர்களிடம் இருந்தும் பணம் வசூலித்து, கடந்த 2 மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளது.

    இந்த மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் மீது உடற்பயிற்சி கூட உரிமையாளர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த சில உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்ற உடற்பயிற்சி கூட உரிமையாளர்களிடம் மோசடி கும்பல் குறித்து தெரிவித்தனர்.

    இதனால் மற்ற உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மோசடி கும்பல் வந்தால் அவர்களை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இந்த நிலையில் சிவகாசியில் சிவமுருகன் என்பவர் நடத்தும் உடற்பயிற்சி கூடத்துக்கு 3 பேர் வந்து அதிகாரிகள்போல் நடித்து பணம் கேட்டனர்.

    அவர்கள் மீது சந்தேகமடைந்த சிவமுருகன், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த சாமி ராஜ் (வயது 30), தினமணி நகரை சேர்ந்த மார்க்கரெட் இன்சென்ட்ஜெனிபர் (28), வில்லாபுரத்தை சேர்ந்த ரங்கராஜ் (26) என்பது தெரியவந்தது.

    அவர்கள் அதிகாரிகள் போல் நடித்து உடற்பயிற்சி கூடங்களில் பணம் வசூலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதிகாரிகள்போல் நடித்து உடற் பயிற்சி கூடங்களில் பணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மைக்செட் உரிமையாளர் மீது தாக்குதல் நடந்தது.
    • மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கட்டைய தேவன் பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்(32). மைக்செட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஊத்துப்பட்டியில் உள்ள சூசையப்பர் ஆலய திருவிழாவிற்காக மைக்செட், சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சோலைபட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மின்விளக்குகளை அணைத்துள்ளார். சரவணகுமார் அதனை தட்டிகேட்டார்.

    இதைத்தொடர்ந்து அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 11 பேர் சரவணகுமாருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் சரவணகுமார், அவருடைய சகோதரர் ரமேஷ்குமார்,உறவினர் வேல்முருகன் ஆகியோரை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி முத்தமிழ் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் வசிப்பவர்கள் அவருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உடனடியாக அவர் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செலவுக்கு பணம் கொடுக்காததால் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைதானார்.
    • பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளிமுத்து நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 26). இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (36), ஆட்டோ டிரைவர். முருகவேலின் சகோதரரான இவர் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் .

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் மற்றும் சகோதரர் முருகவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வைரமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த முருகவேல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி சிவகாசியில் நாளை தொடங்குகிறது.
    • சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    சிவகாசி

    5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்கான கலை பயிற்சிகள் வழங்குதல், அவர்களின் கலைத்திறனை மேம்படுத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

    நெல்லை மண்டலத்தில் இருந்து செயல்படும் விருதுநகர் மாவட்ட ஜவகர் மன்றத்தில் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம் ஆகிய கலையில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிவகாசியில் அமைந்துள்ள அண்ணாமலை-உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் வகையில் நாளை 3-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பரதநாட்டியம், சிலம்பம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை மாணவ-மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நெல்லை மண்டல உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. ராணுவ வீரரான இவரது கணவர் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், சித்தார்த்தா (வயது25) என்ற ஒரு மகனும் உள்ளனர்.2 மகள்களுக்கும் திருணம் செய்து கொடுத்த லோக நாயகி, தனது மகன் சித்தார்த்தாவுடன் வசித்து வந்தார்.

    சித்தார்த்தா என்ஜினீயரிங் முடித்துவிட்டு தைவான் நாட்டில் எம்.எஸ்.படித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக படிப்புக்கேற்ற வேலையை தீவிரமாக தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்க வில்லை. இதனால் அவர் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று லோகநாயகி மட்டும் திருச்சியில் வசிக்கும் தனது சகோதரரை பார்க்க சென்று விட்டார். .

    இதற்கிடையில் சம்பவத்தன்று திருச்சியில் இருந்த லோகநாயகி மகனின் செல்போனுக்கு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த லோகநாயகி ராஜபாளையத்தில் உள்ள தனது சகோதரி ராம திலகத்திடம் தகவல் தெரி வித்து வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

    உடனே அவர் வீட்டுக்கு வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேக மடைந்த ராமதிலகம் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டிற்குள் சித்தார்த்தா தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்தார்த்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வாலிபரின் உடலை பார்த்து தாய், அவரது சகோதரிகள், கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேலை கிடைக் காத விரக்தியில் சித்தார்த்தா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போட்டியில் வெற்றி பெற்ற தொகையை மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வழங்கினர்.
    • மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    மையங்களுக்கு வரும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, பன்முகத் திறன் கொண்டவர்களாக திகழ வேண்டும் என்பதற்காக இந்த மையங்களில் பல்வேறு கற்றல் சார்ந்த செயல்பா டுகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 'குறும்படம் கொண்டாட்டம்' என்ற போட்டி இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் தாங்களே சிந்தித்து கதையை கூறி, அதனை மையத்தின் தன்னார்வலர் மற்றும் ஆர்வமுள்ள மாண வர்களின் துணையுடன் குறும்படமாக தயாரித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றி யத்தின் தன்னார்வலர்கள் மடவார்வளாகம் சிவகாமி, திருவண்ணாமலை முத்துச்செல்வி ஆகியோரது குறும்படங்கள் மாவட்ட அளவில் முறையே 2 மற்றும் 3-ம் இடம் பெற்று மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தற்காக தன்னார் வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி சார்பில் தலா ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி வழங்கினார்.

    தன்னார் வலர்கள் சிவகாமி, முத்துச் செல்வி ஆகியோர் தங்க ளுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மையத்திற்கு வரும் மாண வர்களுக்கு கற்றலுக்கு உதவியாக இருக்கும் வகையில் கற்றல் உப கரணங்களை வாங்கி கொடுத்தனர்.

    குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது.

    தன்னார்வலர் சூர்யா வர வேற்றார். தன்னார்வலர்கள் மகாலட்சுமி, கஸ்தூரி, சித்ரா, சிவரஞ்சினி, கவிதா ஆகியோர் பேசினர். கல்வியாண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட குறுவளமைய குழு தலைவர்களாக செயல்படும் 10 தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் சொந்த செலவில் ரொக்கப் பரிசு வழங்கினார்.

    மேலும் மாவட்ட அளவில் குறும்படம் தயாரிப்பில் வெற்றி பெற்று பரிசு பெற்ற தன்னார் வலர்களும் பாராட்டப் பட்டனர்.

    • மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
    • மே தினம் கொண்டாடப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டா டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடி யேற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் மே தினம் கொண்டா டப்பட்டது. சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி முதன் முதலாக நடந்தது. இந்த நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் அந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம் அதனை ஏற்று 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெற பரவுவதாக இன்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    கார்ப்பரேட் முதலாளி அதானிக்கு காவடி தூக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ள தாகவும் தகவல்கள் வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும் அல்லது எப்போது நடந்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    திருமண மண்டபங்களில் மது விருந்துக்கு அனுமதி, தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை என தமிழக அரசு சில குழப்பமான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இவற்றை கைவிட்டு தமிழகத்தில் படிப்படியாக அனைத்து மதுக்கடை களையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசி அருகே பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • போலீஸ் நிலையத்தில் ராமராஜின் சகோதரர் முருகன் புகார் செய்தார்.

    விருதுநகர்

    சிவகாசி அம்மன் கோவில்பட்டி புது தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி(35). இவர் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான மோட்டார் அறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரியின் சகோதரி சுந்தரேசுவரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் பசும்பொன் காலனியை சேர்ந்தவர் ராமராஜ்(37), கட்டிட தொழிலாளி. மனைவியை பிரிந்து 2 வருடங்களாக தனியே வசித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் ராமராஜின் சகோதரர் முருகன் கொடுத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×