ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்

விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் திருடப்பட்டது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சமுத்திரவள்ளி(வயது48). இவர் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் தனது நகையை அடகு வைத்திருந்தார்.

நேற்று அந்த நகையை மீட்டுக்கொண்டு பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். பின்னர் சத்திரப்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி வீடு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்தபோது நகை வைத்திருந்த மணிபர்ஸ் மாயமாகி இருந்தது. அதில் ரூ.7ஆயிரம் ரொக்கமும் இருந்தது. பஸ்சில் யாரோ மர்ம நபர் கட்டைப்பையில் வைத்திருந்த மணிபர்சை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சமுத்திரவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com