search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர்: தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    விருதுநகர்: தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டு தலின்படியும் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று (மே-1) விருதுநகர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தொழிலாளர் தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

    விடுமுறை அளிக்கப் படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனும திக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலை யளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழி லாளர்களிடம் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் கையொப்பம் பெற்று விடுமுறை தினத்திற்கு 24மணிநேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை அனுச ரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழி லாளர்களை பணிக்கு அமர்த்திய 45கடைகள் மற்றும் நிறுவனங்கள், 21 உணவு நிறுவனங்கள், 2மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 68 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×