என் மலர்
விருதுநகர்
- விருதுநகர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்தவர் கோமதி. இவரது மகள் மகேஸ்(28). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பாக்கியராஜூக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தையும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பாக்கியராஜ் கேரளாவிற்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோமதிக்கு போனில் தெரிவித்தனர். உடனடியாக கோமதி மகள் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.பாக்கியராஜ் குடும்பத்தார் தெரிவித்த தகவல்களில் கோமதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் மகள் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டய தேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பெரியபாண்டி. இவரது கடைசி மகன் கடந்த மாதத்தில் திடீரென இறந்து விட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.
முதல் நாள் திருவிழா சிங்கராஜாகோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 2-ம் நாள் திருவிழா சக்கராஜா கோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 3-ம் நாள் திருவிழா பிள்ளைமார் சமூகத்தார் சார்பிலும், 4-ம் நாள் திருவிழா புதுப்பாளை யம் ஆசாரியர்கள் சமூகத் தார் சார்பிலும், 5-ம் நாள் திருவிழா பூபால்ராஜாபட்டி ஆசாரியர்கள் சமூகத்தார் சார்பிலும், 6-ம் நாள் திருவிழா மடத்துப்பட்டி தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தார் சார்பிலும் நடந்தது.
7-ம் நாள் திருவிழா புதுப்பாளையம் தேவர்கள் சமூகத்தார் ஆண்டதம்மன் கோவில் தெரு நாட்டாமை சார்பிலும், 8-ம் நாள் திருவிழா துரைச்சாமிபுரம் வணிக வைசியர்கள் சமூகத்தார் சார்பிலும், 9-ம் நாள் திருவிழா சாலியர்கள் சமூகத்தார் சார்பிலும் நடைபெற்றது.
அம்மன் பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூதவாகனம், தண்டியல் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம் போன்ற சப்பரங்க ளில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். 10-ம் திருவிழாவில் நாராயண ராஜா வகையறாக்கள் சார்பில் மேற்படியாளர்கள் மஞ்சள் பட்டு, சாலியர்கள் மஞ்சள் பட்டுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காப்பு கட்டிய குழந்தைகள் பெண்கள் உள்பட 5080 பக்தர்கள் அணிவகுத்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா தலைமையில் அறங்காவலர் குழுவினர் ரமேஷ்ராஜா, ராமராஜ் ராஜா, ஜெயக் குமார்ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் செய்தி ருந்தனர். டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை-பணம் அபேஸ் செய்யப்பட்டது.
- சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பொங்கல் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சிவகாசிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மினி பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக தான் கையில் வைத்திருந்த பையில் மணிபர்சை எடுத்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 காணாமல் போய் இருந்தது. யாரோ மர்மநபர் நகைகளையும், பணத்தையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.
- விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பூரணபுஷ்பம் (வயது 55). இவரது தந்தை பழனிநாதன்(75).
இவர்கள் செங்கோட்டையில் இருந்து காசிக்கு செல்லும் சுற்றுலா ரெயில் முதன்முறையாக இயக்கப்பட்டதால் அதில் செல்ல திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்தனர். இந்த ரெயில் ராஜபாளையத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வரும் என்பதால் மகளும், தந்தையும் வீட்டில் இருந்து புறப்பட்டனர்.
முகவூரில் இருந்து ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சாமிராஜ் என்பவரின் ஆட்டோவில் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது எதிர்திசையில் மதுரையில் இருந்து சங்கரன்கோவில் சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் உருக்குலைந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பூரணபுஷ்பம் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது தந்தை பழனிநாதன் படுகாயம் அடைந்தார். ஆட்டோ டிரைவர் சாமிநாதனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பூரணபுஷ்பம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனிநாதன் மற்றும் ஆட்டோ டிரைவர் சாமிநாதனையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.
- மது போதையில் இருந்த அவர், ரெங்கசாமியுடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் யாதவர் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ரெங்கசாமி (வயது 63). இவருக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவருக்கும், அவரது சித்தப்பா மகனுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ரெங்கசாமி தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு மர்ம நபர் வந்தார். மது போதையில் இருந்த அவர், ரெங்கசாமியுடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட முதியவர் ரெங்கசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மது போதையில் இருந்த வாலிபர் ரெங்கசாமியை கொலை செய்ததாக தெரியவந்தது. ஆனால் ரெங்கசாமியின் உறவினர்கள் கூறுகையில், ரெங்கசாமிக்கும், அவரது சித்தப்பா மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகவும், அவர்கள்தான் கூலிப் படையை வைத்து ரெங்கசாமியை கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
- இதில் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் பச்சமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் உருவங்களை பொறித்த முளைப்பாரிகள் முன் செல்ல குழந்தைகள், பெண் கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இளைஞர்கள் நடனத்துடன் மேள தாளம் முழங்க கோவிலில் தொடங்கிய ஊர்வலம் பொட்டல்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், சங்கர பாண்டியபுரம், அம்பலபுளி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
ஊர்வலத்தின் இடையே சாரல் மழை குறுக்கிட்டாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
- இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த என்ஜினீயரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பட்டதாரியான இவர் பல இணைய தளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சுவேதா கார்த்திக். பட்டதாரியான இவர் படிப்புக்கேற்ற வேலை தேடி வந்துள்ளார். அதற்காக பல இணையதளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் மங்கம் மாள்பாளையத்ைத சேர்ந்த பாலமுருகன் என்பவர் சுவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாகவும், தன்னால் வெளிநாட்டில் வேலை வாங்கி தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது போட்ேடா அடையாள அட்டை உள்ளிட்டஆவணங்களை செல்போனில் அனுப்பி உள்ளார். அைத பார்த்து நம்பிய சுவேதா அவரிடம் வேலை தொடர்பாக விவரம் கேட்டுள்ளார்.
அப்போது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சிங்கப்பூர் கிளையில் பணி வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பணியை பெற ரூ.2 லட்சம் செலவாகும் என்றும் கூறி உள்ளார்.
இதையடுத்து 2 தவணைகளில் ரூ.2 லட்சத்தை பாலமுருகனின் வங்கி கணக்குக்கு சுவேதா வுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேலைக்கான பணி ஆணையை பால முருகன் அனுப்பி வைத்து உள்ளார்.
அதில் பணி மற்றும் சம்பள விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுகுறித்து பால முருகனிடம் சுவேதா விவரம் கேட்டார். அப்போது மேலும் ரூ.2 லட்சம் தேவைப்படும் என்றும், பணத்தை செலுத்திய பின்பு நிறுவனத்தில் இருந்து முறையான அழைப்பு வரும் என்று பாலமுருகன் கூறியுள்ளார். பணி ஆைண வந்து விட்டதால் வேலை உறுதி என நம்பிய சுவேதா மீண்டும் ரூ.2 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் நிறுவனத்தில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுவேதா அது தொடர்பாக பாலமுரு கனை தொடர்பு கொண்டார். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசி உள்ளார். அதன் மூலம் பாலமுருகன் தன்னை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார் என்பது சுவேதாவுக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைவாங்கி தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த பாலமுருகனை தேடி வருகின்றனர்.
- விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்க நாதன்புத்தூர் மண்ட கப்படி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சந்தன செல்வி (வயது27). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் முத்துபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சந்தனசெல்வி வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக தனது தாய் தங்கமாடத்தி வீட்டுக்கு வந்தார். அவர் நகையை திருப்பிவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவர் விஷம் குடித்தி ருப்பது தெரியவந்ததும் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தங்கமாடத்தி சேத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து சந்தனசெல்வி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
- விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரி-முதியவர் தற்கொலை செய்தனர்.
- பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் மயிலரசன் (வயது 41). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேேய இருந்துள்ளார். அதுகுறித்து அவரது மனைவி அவரிடம் கேட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு மயிலரசன் வீட்டைவிட்டு வெளிேய சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே மயிலரசன் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. உடனடியாக உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மயிலரசன் மனைவி செண்பகவல்லி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரத்ைத சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து கேட்டு தாய், தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமான்தேவன்பட்டியை சேர்ந்தவர் முத்து(75). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு மணிமாறன் என்ற மகனும், 2மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சொத்துகளை தனது பேரில் எழுதி வைக்குமாறு மணிமாறன் தந்தையிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் 2மகள்கள் இருப்பதால் 3பேருக்கும் சரிசமமாக சொத்தை பங்கீடு செய்துதான் தரமுடியும் என முத்து கூறியுள்ளார்.இந்த நிலையில் சம்பவத்தன்று சொத்துக்களை எழுதி வைக்க கேட்டு மணிமாறன் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிமாறன் பெற்றோரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி நீராசிலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது54). சம்பவத்தன்று அருந்ததியர் காலனி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது சீதாலட்சுமியை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






