மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

விருதுநகர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டய தேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பெரியபாண்டி. இவரது கடைசி மகன் கடந்த மாதத்தில் திடீரென இறந்து விட்டார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com