search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர்
    X

    பெண் பக்தர் தீ மிதித்த காட்சி. 

    பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர்

    • பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    முதல் நாள் திருவிழா சிங்கராஜாகோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 2-ம் நாள் திருவிழா சக்கராஜா கோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 3-ம் நாள் திருவிழா பிள்ளைமார் சமூகத்தார் சார்பிலும், 4-ம் நாள் திருவிழா புதுப்பாளை யம் ஆசாரியர்கள் சமூகத் தார் சார்பிலும், 5-ம் நாள் திருவிழா பூபால்ராஜாபட்டி ஆசாரியர்கள் சமூகத்தார் சார்பிலும், 6-ம் நாள் திருவிழா மடத்துப்பட்டி தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தார் சார்பிலும் நடந்தது.

    7-ம் நாள் திருவிழா புதுப்பாளையம் தேவர்கள் சமூகத்தார் ஆண்டதம்மன் கோவில் தெரு நாட்டாமை சார்பிலும், 8-ம் நாள் திருவிழா துரைச்சாமிபுரம் வணிக வைசியர்கள் சமூகத்தார் சார்பிலும், 9-ம் நாள் திருவிழா சாலியர்கள் சமூகத்தார் சார்பிலும் நடைபெற்றது.

    அம்மன் பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூதவாகனம், தண்டியல் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம் போன்ற சப்பரங்க ளில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். 10-ம் திருவிழாவில் நாராயண ராஜா வகையறாக்கள் சார்பில் மேற்படியாளர்கள் மஞ்சள் பட்டு, சாலியர்கள் மஞ்சள் பட்டுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காப்பு கட்டிய குழந்தைகள் பெண்கள் உள்பட 5080 பக்தர்கள் அணிவகுத்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா தலைமையில் அறங்காவலர் குழுவினர் ரமேஷ்ராஜா, ராமராஜ் ராஜா, ஜெயக் குமார்ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் செய்தி ருந்தனர். டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×