என் மலர்tooltip icon

    விருதுநகர்

    வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன் (வயது 31). இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் சிறையில் இருந்தவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த அன்பழகன் கனகராஜன் மனைவியை சந்திக்க முயற்சித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது அத்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனை வீடு புகுந்து கனகராஜ் மற்றும் அவரது மகன் கணேஷ் ராஜ் ஆகியோர் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்திருந்தனர். இதை தொடர்ந்து கனகராஜின் மகன் கணேஷ் ராஜையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாளை மின் தடை ஏற்படும்.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    விருதுநகர்

    ஆவியூர் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியா ளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின்நிலையங்களு க்குட்பட்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. ஆதலால் ஆவியூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கல்லுப்பட்டி, தொடு வன்பட்டி, புல்லூர், வினோபா நகர், வலை யங்குளம், பெருமாள் புதுப்பட்டி, கல்லணை, சேது பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

    அதேபோல காரியாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளத்துப்பட்டி, பாண்டியன் நகர், அச்சம்பட்டி, சின்ன காரியபட்டி, காரியாபட்டி பஸ் நிலையம், செவல்பட்டி, சித்து மூன்றடைப்பு, சத்திரம் புளியங்குளம், பாப்பனம், கம்பிகுடி, சுந்தரம் குண்டு, வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது.

    புல்வாய்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அ.முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், நாங்கூர், எழுவணி, குண்டு குளம், தொட்டியங்குளம், திம்மாபுரம், வேப்பங்குளம், முஷ்டக்குறிச்சி, தேசிய னேந்தல், எஸ். நாகூர், மேல கள்ளங்குளம், ஆவியூர், அரசகுலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வழங்கப்பட்டது.
    • மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.ஜி.மாதவன் தலைமையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    அப்போது விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வசூல் தொகை ரூ.1.11 கோடிக்கான காசோலை களை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.

    சிவகங்கை மண்டல இணைப் பதிவாளர் கோ.ஜினு, விருதுநகர் இணைப்ப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் சந்தன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, விருதுநகர் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு பிரசார அலுவலர் செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மனைவியின் கையை பிடித்து இழுத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் இசக்கிராஜா(வயது26), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பானுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பானுபிரியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிராஜா, விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள்(20) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று முன்தினம் புதுப்பாளையம் மாரி யம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதனை காண்பதற்காக இசக்கிராஜா, அவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மங்காபுரம் தண்ணீர் தொட்டி அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி(25) என்பவர் பாண்டியம்மாள் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதனை இசக்கிராஜா தட்டிக் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பைப்பை எடுத்து இசக்கிராஜாவை சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி இசக்கிராஜா ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகிறார்.

    • வெம்பக்கோட்டை அருகே தொல்லியல் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
    • தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35 ஆண்டு களுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

    இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடுவை மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணி யப்படும் பதக்கம், பெண் சிற்பங்கள், சங்குவளை யல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

    இங்கு கண்டெ டுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இங்கு கோடை விடுமுறையில் சுற்றுலா பயணி கள் மற்றும் பொது மக்கள் தொல்பொருட்களை பார்வையிட்டு தொன்மை யான மனிதர்களின் வர லாற்றை அறியும் வகையில் தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட் டுள்ளது.

    அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்து வதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் கண்காட்சி தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    • சாத்தூர் அருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில் புரத்தை சேர்ந்தவர் வைர முத்து (வயது 38). இவரது மனைவி கவிதா. வைரமுத்துக்கு குடி பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கோவில் திருவிழா வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கவிதாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கவிதா அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பி கார்த்திக்கிடம் இது பற்றி கூறினார்.

    உடனடியாக அங்கு வந்த கார்த்திக், குடித்து விட்டு ஏன் தகராறு செய்கிறீர்கள் என வைரமுத்துவிடம் தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் வாக்கு வாதம் முற்றி கை கலப்பாக மாறியது. அப்போது கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைரமுத்துவை குத்தினார். இதையடுத்து அங்கிரு ந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி வைரமுத்து கொடுத்த புகாரின்பேரில் ஏழாயிரம் பண்ணை போலீ சார் வழக்குப்பதிவு செய்து மைத்துனரை கத்தியால் குத்திய கார்த்திக்கை கைது செய்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 50). இவர் தனது 2-வது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்காக செலவுக்கு அவரது தந்தை சேவுகன் மற்றும் தாய் வள்ளியம்மாளிடம் பணம் கேட்டு சென்றார். ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறி விட்டனர். இதனால் முத்துப்பாண்டி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபோதையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துப்பாண்டி மனைவி மாரியம்மாள் ெகாடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நல்லூர்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (30). இவருக்கு ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா கொடுத்தபுகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியாபுரம் சாரதா நகரை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது மகன் ஜெகநாதன் (20). இவர் உறவினர் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு வீட்டாரும் பேசி பெண்ணின் படிப்பு முடிந்த பின்னர் திருமணத்தை உறுதி செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதுவரை பெண்ணை தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி ெஜகநாதனுக்கு அறிவுரை கூறி உள்ளனர். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை இருவீட்டாரும் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஆலை போர்மேன் திடீரென இறந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் படந்தால் அருகே உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 48), பட்டாசு ஆலை போர்மேன். இவருக்கு குடி பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் மனைவி கோபித்துக் கொண்டு ஒருவருடத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தனியாக வசித்து வந்த காளிராஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காளிராஜ் மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
    • மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன்(வயது31). இவர் மீது வனவிலங்குகளை வேட்டையாடுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கனகராஜ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அன்பழகன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் கனகராஜின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அன்பழகனின் வீடும், கனகராஜின் அத்தை வீடும் அருகில் உள்ளன.

    நேற்று கனகராஜ் தனது அத்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இது பற்றி அறிந்த கனகராஜ், அன்பழகனை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவில் அரிவாளுடன் சென்ற கனகராஜ் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அன்பழகனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அன்பழகனை வெட்டிக்கொலை செய்த கனகராஜை கைது செய்தனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தொழிலாளி வெட்டிக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • முழுமையாக தயாரிக்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப்பொருட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி பாபநாசம் (வயது 40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 100-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று பட்டாசு ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த 2 அறைகளும் சேதமானது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    முழுமையாக தயாரிக்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப்பொருட்களில் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நாரணபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் பாலாஜி பாபநாசம், போர்மேன் கணேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வராஜ் வருவதை பார்த்து, வெளியே காவலுக்கு நின்றிருந்த நபர் தப்பியோடிவிட்டார்.
    • போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருபவர் செல்வராஜ். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவது வீட்டின் ஒரு பகுதியில், 2 தனியார் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரான செல்வராஜூக்கு தீ கருகிய வாடை வந்துள்ளது.

    இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது, 2 மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து எந்திரத்தை வெல்டிங் மிஷின் உதவியுடன் உடைத்து திறக்க முயன்று கொண்டிருந்தனர். மற்றொரு நபர் ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

    செல்வராஜ் வருவதை பார்த்து, வெளியே காவலுக்கு நின்றிருந்த நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மற்ற 2 மர்ம பேரையும் ஏ.டி.எம். மையத்திற்குள்ளேயே வைத்து ஷட்டரை அடைத்து செல்வராஜ் பூட்டு போட்டார்.

    பின்னர் இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், ஷட்டரை திறந்து, அந்த 2 நபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனிடையே, ஏ.டி.எம். கொள்ளை முயற்சி தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனிடையே சாதுர்யமாக செயல்பட்டு வடமாநில கொள்ளையர்களை பிடிக்க உதவிய போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர் செல்வராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரும் அவரை பாராட்டினார்.

    • விருதுநகர் அருகே இளம்பெண்-கல்லூரி மாணவர் மாயமானார்கள்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கிலி, டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது22) கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் சங்கிலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் கற்பகலட்சுமி. இவரது மகன் கார்த்திகேயன். இவர் அங்குள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 16-ந் தேதி அன்று இவர் திடீரென மாயமானார்.

    இதைத் தொடர்ந்து கற்பக லட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் கார்த்திகேயன் தனது காதலியை தேடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை மீட்டு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் கற்பக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×