காவலாளி திடீர் சாவு

காவலாளி திடீரென இறந்தார். நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலாளி திடீர் சாவு
Published on

விருதுநகர்

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து(33). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி நெடுகனேந்தலில் நடைபெற்ற மாமனாரின் இல்ல விழாவிற்காக சென்றார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயமுத்துவின் தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com