search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disbursement"

    • ரூ.80 லட்சம் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டது.
    • சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வி.ஏ.30 விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கங்கள், நகர வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் தொடக்க நிகழ்வாக 8 பேருக்கு ரூ.80 லட்சத்து 30 ஆயிரம் முதல் கடன் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்-மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மாரியப்பன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினர்.

    அப்போது சங்கத்தின் தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • 22 தொழிலாளர்களுக்கு ரூ. 4.77 லட்சம் ஊதிய நிலுவை வழங்கப்பட்டது.
    • புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் முத்திரையிடாத தராசுகள் மற்றும் படிக்கற்கள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. கூடுதல் தொழி லாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் ஆகியோரது உத்தரவின் பேரில் அதிகாரிகள் மதுரை மாவட்டத்தில் சோதனை நடத்தினர்.

    ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், காய்கறி- பழக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மறு முத்திரையிடாத தராசுகள், தரப்படுத்தாத எடை அளவுகள், மறு பரிசீலனை சான்று வைக்காத 21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிக பட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 16 நிறுவனங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 15 நிறுவ னங்கள் அரசு நிர்ணயித்தபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்கவில்லை என்பது தெரிய வந்தது. இதில் 5 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 22 தொழிலாளர்களுக்கு

    ரூ.4 லட்சத்து 77 ஆயிரத்து 283 சம்பள நிலுவைத் தொகை பெற்று தரப்பட்டது.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் உதவி கமிஷனர் (அம லாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தராசுகளை முத்திரையிட, பதிவுச் சான்றுகளைப் பெற labour.tn.gov.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது, 18 வயது முடியாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி தவறு. அப்படி கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

    குழந்தை தொழிலாளர் குறித்து 1098 அல்லது பென்சில் போர்டல் (PENCIL PORTAL) என்ற இணையதளம் வழியாக புகார் தெரிவிக்கலாம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்துவது, அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட புகார்கள் குறித்து National Consumer Helpline No. 1915 அல்லது இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    • விருதுநகர் மாவட்ட மகளிர் குழுக்களுக்கு ரூ.650 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டது.
    • சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை வங்கி கணக்கிலேயே வழங்க இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் பயிற்சி கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்தில், வங்கி களின் பங்கு குறித்தும், வங்கிகள் நிலையான வட்டி வருமானம் மற்றும் முறையாக கடனை செலுத்து வதால் வட்டி மானியம் பெறுவதில் உள்ள தடைகள் அகற்றுவது பற்றியும், கடன் திரும்ப கிடைப்பதில் உள்ள நம்பகத் தன்மை குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கி விதிமுறை கள் குறித்தும், வங்கியாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    இனி வரும் காலங்களில் தனிநபர் மற்றும் குழுக்கடன் பெறும் சுய உதவிக் குழுக்களின் பயனாளிகளுக்கான மானியத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே வழங்குவதற்கான இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்ட த்தில் 2022-23-ம் நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.650 கோடி கடன் உதவிக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை ரூ.351.97 கோடி வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அதிக தொழில்களை நம்பி இருக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. வங்கியாளர்கள் தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2021-22-ம் ஆண்டு அதிக கடன் உதவி வழங்கிய 8 மாவட்ட அளவிலான வங்கிகளுக்கும், 10 மாவட்ட அளவிலான வங்கி கிளைகளுக்கும் பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    ×