என் மலர்
விருதுநகர்
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விருதுநகர்
விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.
- காங்கிரசார் ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
- கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகர காங்கிரஸ் சார்பில் கர்நாடக மாநில சட்டபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் காந்தி சிலை ரவுண்டானாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
நகர தலைவரும், கவுன்சிலருமான சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். ஜ.என்.டி.யு.சி. தலைவர் பிரபாகர், டைகர் சம்சுதீன், பி.கே.துரை, பால்கனி, சிவசுப்பிரமணி, ரவிராஜா, வெங்கட்ராமன், ராஜாராம், ஸ்ரீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வேனுடன் பட்டாசு திரிகள் பறிமுதல்- 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்த னர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனையிட்டனர். அதில் 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் இருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்தத போது அதில் பட்டாசு திரிகள் இருந்தன.
மொத்தம் 13 மூடைகளில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு திரிகள் இருந்தன. போலீசார் வேனுடன் அவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வேனில் வந்தவர்கள் தாயில்பட்டி அண்ணா காலனிைய சேர்ந்த அருண்குமார் (வயது 26), கோட்டையூரை சேர்ந்த மகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- வியாபாரி மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் (42). இவர் திருப்பூரில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் குடும்பத்துடன் கூமாபட்டிக்கு வந்தார். இந்த நிலையில் ராஜபாளையம் செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ஜெகபர்சாதிக்கின் மனைவி அபிராஜ் பேகம் கொடுத்தபுகாரின்பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் ரவீந்திரநாத் (57). இவர் வட்டார கல்வி அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். அதன் பின்னர் உடல்நிலை பாதிப்பால் ெதாடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து ரவீந்திர நாத்தின் மனைவி விமலா கொடுத்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.
- தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (ேலாக் அதாலத்) நடந்தது.
விருதநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கோர்ட்டு மற்றும் விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜ பாயைம் ட்ட சட்டப்பணிக் குழுக்கள் சார்பில் கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 5 ஆயிரத்து 921 வழக்குகள் பரிசிலினைக்கு எடுக்கப்பட்டது. அதில் சுமார் 2 ஆயிரத்து 286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரத்து 903 பயானளிகளுக்கு கிடைத்தது.
இதில் வழக்கறிஞர்கள். நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வ சட்டப்பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு எலும்பு முறிவு மருத்துவர், வங்கி மேலா ளர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.
- வாலிபர் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அங்காளஈஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பாலத்தின் சுவரில் 3 வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதை தொடர்ந்து அவர்களிடம் சோதனையிட்ட போது ஒரு வாலிபரிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். அப் போது கஞ்சா வைத்திருந்த வாலிபர் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். போலீசார் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் பட்டம் புதூரை சேர்ந்த சூரியராஜா (வயது 22), ஜே.சி.பி. டிரைவர் என்பதும், உடன் இருந்தவர்கள் அவரது உறவினர்களான முத்துராஜா, நாகராஜா என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் நிறுவனர் தினம் கொண்டாட்டப்பட்டது.
- உதவி பேராசிரியை செண்பகலட்சுமி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜன் முன்னிலை வகித்தார். முனைவர் சந்திராபோஸ் வரவேற்றார்.
முதல்வர் வளர்மதி பேசினார்.
சிவகாசி எம்.டி.சி. பாலிமெர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாரிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ''எண்ணங்களே மனிதர்கள் வாழ்வில் அடைய போகும் உயரத்தை தீர்மானிக்கும்'' என்ற கருத்தில் சிறப்புரையாற்றினார்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம்.பி.ஏ. முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்காக புத்தக மதிப்பாய்வு, கட்டுரை விமர்சனம், வணிக வினாடி-வினா, வணிகத் திட்டம், சிறந்த மேலாளர், கழிவுகளில் இருந்து செல்வம், தீம் அடிப்படையிலான புகைப்படம், விளம்பர நகல் போட்டி, தினை உணவு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முடிவில் உதவி பேராசிரியை செண்பகலட்சுமி நன்றி கூறினார்.
- தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
பாலையம்பட்டி
அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு அங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கும் வரை அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் போதிய முன்னறிவிப்பின்றி பஸ்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு தற்காலிக பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்குவதிலும் குளறுபடி உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதியதாக பஸ் நிலையம் கட்டும் பணிகள் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்ற நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும், பஸ்கள் நிற்பதை முறைப்படுத்தி வியாபாரிகளுக்கு சரியான முறையில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
- விருதுநகர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
- எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி வேல்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் சுபபிரியன் (வயது14).
இவன் சூரப்ப நாயக்கன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பொதுத்தேர்வு எழுதியிருந்த சுபபிரியன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தான்.
இந்தநிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த சுபபிரியன், நேற்று அங்குள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. அங்கு தண்ணீரில் இறங்கிய அவர் ஆழமான பகுதியில் சிக்கினான்.
அங்கிருந்து வெளியேற முடியாமல் சுபபிரியன் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து தகவலறிந்த எம்.ரெட்டியபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்மாயில் மாணவனை தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.
மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கண்மாயில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நில உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்புச் சாலை திட்டப்பணியில் நில எடுப்பு பணிக்காக அரசு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த பணியில் நில உரிமையாளர்களுடன் இறுதி கலந்தாய்வு கூட்டம் ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமை தாங்கினார். தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நில உரிமையாளர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கை ஒப்படைத்தனர்.
அவர்கள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் ஜூன் மாத இறுதியில் பணம் வரவு வைக்கப்படும், மேலும் நெடுஞ்சாலைத் துறை சார்பாக அடுத்த மாதம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு சாலை அமைக்கும் விரைவில் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நில உரிமை யாளர்கள் அனைவருக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினரான தனது சார்பாகவும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
- தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்ட ரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
தலைவர்-ஜெயராணி, துணைத்தலைவர்-ராஜேஸ்வரி, அமைப் பாளர்-பாண்டீஸ்வரி, துணை அமைப்பாளர்கள்-கலைமணி, முத்துமாரி, சித்ராதேவி, ஜெயலட்சுமி, மிக்கேல் அம்மாள், வலை தள பொறுப்பாளர்கள்-ரோகினி, காவ்யா.
தலைவர்-சுஜாதா, துணைத்தலைவர்-உமா மகேஸ்வரி, அமைப்பாளர்-ஜான்சி, துணை அமைப்பா ளர்கள்-வசந்தா, விஜய லட்சுமி, மாலதி, சொர்ணம், வேணி, கோதாவரி, வலைதள பொறுப்பாளர் கள்-ஜான்சிராணி, ஆதி லட்சுமி.
மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.






