தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்

தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்
Published on

விருதுநகர்

சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணபிரபு. இவர் சம்பவத்தன்று தனது தாய் மகாலட்சுமியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது சகோதரர் கண்டித்தார். அப்போது லட்சுமணபிரபு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com