search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும்- அமைச்சர்கள்
    X

    தொல்பொருள் கண்காட்சியை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும்- அமைச்சர்கள்

    • பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
    • தமிழரின் தொன்மையை அறிந்துகொள்ள வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல்துறை மூலம் அகழாய்வில் கண்டெ டுக்கப்பட்ட தொல்பொ ருட்களை கொண்டு கண்காட்சி அமை க்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சிவகாசி அசோகன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் பல்வேறு முக்கியமான வரலாற்று சான்றுகள் கண்டறி யப்பட்டு, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக் கப்பட்ட தொல்பொருட்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட்டு, தமிழரின் பண்பாடு மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருட்கள் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    தென்னிந்தியாவில் நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை யிலான காலகட்டங்க ளுக்குட்பட்ட வரலாற்று ஆவணங்கள் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்டு இதுவரை நிரூபிக்கப்பட வில்லை. ஆனால் வெம்பக் கோட்டை பகுதியில் அதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. முதற்கட்ட அகழாய்வில் இந்த பகுதியில் இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

    மேலும் நுண்கற்கால கருவிகள் மற்றும் பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணால் ஆன காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து இந்த பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6.4.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    இதில் தற்போது வரை சுமார் 896 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், தற்கால தலைமுறையினர்கள் என அனைவரும் இந்த வெம்பக்கோட்டை தொல்பொருட்கள் கண்காட்சியை பார்வை யிட்டு நம்முடைய பழங்கால நாகரீகத்தையும், தமிழரின் தொன்மையையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, தொல்லியல் துறை ஆணையர் காந்தி, இயக்குநர் பொன்பாஸ்கர், துணை இயக்குநர் சிவானந்தம், வட்டாட்சியர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×