அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்

அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று விசாரித்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே பெத்துலுப்பட்டி விலக்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக நிர்வாக அதிகாரி சகாயராஜ் ஜீவனுக்கு தகவல் கிடைத்தது. அவர் நேரில் சென்று விசாரித்தபோது இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com