என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீபிதி பூரண ஜெய ஆனந்த் தலைமை தாங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர், வழக்கறிஞர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முத்திரை ஆய்வாளர், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வ சட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பொன்சிவா (வயது 25). இவர் அங்குள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கிழக்கு தெரு உள்ள அம்மன் கோவிலில் 2 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் பொன் சிவா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைஅவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பொன்சிவா விஷம்குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன் சிவா உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸ்நிலையத்தில் பொன்சிவாவின் தாய்மாமன் இருளப்பன் கொடுத்த புகாரின் போரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    நாளை (15-ந் தேதி) பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • முதல்-அமைச்சர் அமைத்த குழுவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட முதல்-அமைச்சர் ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உள்ளார். அதன்படி தமிழ் காப்பாளர் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இணைத்தலைவர்களாக அமைச்சர் மெய்யநாதன், கணேசன், செயலாளராக கூடுதல் தலைமை செய லாளர் பிரபாகரன், உறுப்பி னர்களாக டாக்டர்கள் ஜெயநந்தன், நாகநாதன், திண்டுக்கல் லியோனி, தமிழ் காமராசன், பர்வீன் சுல்தானா, நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் தமிழ்த்தாயின் தவப்புதல் வன் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். இணைத் தலைவர் களாக அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், செந்தில்பாலாஜி, செயலாள ராக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, ராஜேந்திரன், பொற்கோ, பேராசிரியர்கள் அருணன், மருதநாயகன், ராஜன் துறை மற்றும் கலிய பெருமாள், பாரதி கிருஷ்ணகுமார், அரவிந்த ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    • கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணம்மாள். இவரது பேரன் சூர்யா(6). இவர் ஊருக்கு தெற்கில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் சிறுவன் பின்னர் வீடு திரும்பவில்ைல. உறவினர்கள் தேடிப்பார்த்தபோது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி-வியாபாரி உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர் நகரை சேர்ந்தர் லட்சுமி(வயது40). இவரது மகள் முனீஸ்வரி(20). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செல்போன் டவர் அமைத்தபோது அதில் வேலை செய்த ஒருவருடன் முனீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரி

    மல்லாங்கிணறு அருகே உள்ள கண்டியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் அஜித்(21). காய்கறி வியா பாரம் செய்து வருகிறார்.வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அஜித்தின் தாய் மாரி யம்மாள் மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி

    ஏழாயிரம்பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் மோகன்(56). இவரது முதல் மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது 4 மாத பெண் குழந்தையை அவர் தத்தெடுத்து வளர்த்தார்.அதன்பின்னர் பாண்டிசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. வளர்ப்பு மகள் தற்போது 10-ம் வகுப்பு முடித்துள்ளார். பிளஸ்-1 சேர்ப்பதற்காக சாத்தூரில் உள்ள பள்ளிக்கு அழைத்து செல்வதாக அவரிடம் மோகன் கூறியுள்ளார்.

    அதிகாலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஏழாயிரம்பண்ணை போலீசில் மோகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னறர்.

    மாணவன்

    சாத்தூர் சத்திரப் பட்டியை சேர்ந்தவர் பொன்னுகிளி. இவரது மகன் சாத்தூர் பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். குருலிங்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு திரு விழாவுக்காக சென்றார். அவரது கையில் ரூ.1000 பணம் கொடுத்து பாட்டி ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் பொன்னுகிளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த ராஜபாளையம் ராணுவ வீரர் குடும்பத்திற்கு விருது வழங்கப்பட்டது.
    • விருது வழங்கி கவுரவித்தனர்.

    ராஜபாளையம்

    கடந்த 1965-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் ராஜபாளையத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாராயணராஜா வீரமரணமடைந்தார்.

    இந்த நிலையில் அவரது தியாகத்தை கவுரவிக்கும் வகையில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரத்தை சார்ந்த ராணுவ முகாமில் இருந்து சுபேதார் சிவசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற மேஜர் திருப்பதி ராஜா ஆகியோர் இந்திய ராணுவம் சார்பில் ராஜபாளையத்திற்கு நேரில் வந்து நாராயணராஜா குடும்பத்தினருக்கு வீர விருது வழங்கி கவுரவித்தனர்.

    ஏற்கனவே கடந்த மாதம் இந்திய அரசு சார்பில் ராஜபாளையத்தில் உள்ள 5-வது என்.சி.சி சைகை அணி சார்பில் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு பேரணி-கைெயழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • மனிதசங்கிலி நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார். பின்னர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    தொடர்ந்து விழிப்பு ணர்வு பிரசார வாகனத்தை யும் கலெக்டர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு, மனித சங்கிலி போன்றவற்றில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழி லாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) மைவிழிச்செ ல்வி, விருதுநகர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேல்முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 11 இடங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மனிதசங்கிலி நடந்தது.

    இதேபோல் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சாத்தூர், அருப்புக் கோட்டையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நடந்தது.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்து உள்ளார்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாமிநாதபுரத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ்(41). இவர் ஆலங்குளம் முக்கு ரோட்டில் பெட்டி கடை வைத்துள்ளார். ரோந்து போலீசார் இவரது கடையில் சோதனையிட்டபோது 2½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்த ஆலங்குளம் போலீசார் மிக்கேல்ராஜை கைது செய்தனர். சிவகாசி மாரிமுத்து தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் அந்த பகுதியில் உள்ள தியேட்டரின் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    போலீசார் ரோந்து சென்று சோதனையிட்டபோது 150 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் ரூ.24 லட்சம் மோசடி செய்த ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் பேராளி ேராட்டில் பாலிதீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் அலுவலராக சாஸ்திரி நகரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உள்ளார். இவர் அங்கு 7 வருடங்களாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்காமலும், அனுமதி பெறாமலும் பேப்பர் ரோல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தஞ்சாவூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வாங்கியுள்ளார். பின்னர் தனது மகன் கவுதமன் பெயரில் உள்ள நிறுவனத்தின் பெயரில் ேபாலி ரசீதுகளை தயார் செய்து ரூ.24 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கணக்காளராக பணிபுரியும் பாலாஜி நகரை சேர்ந்த செல்வ ராஜன்(வயது72) விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன், கவுதமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • நரிக்குடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடத்தை வீடுபோல் மூதாட்டி பயன்படுத்துகிறார்.
    • பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    பயணிகள் நிழற்கூடம் அருகே பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவிந்து கிடக்கும் காட்சி.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து பஸ் பயணிகள் மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன் படுத்தி வருகிறார்.

    அவர் இந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரும் அமர விடாமலும், அவதூறாக பேசி யும் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மூதாட்டி நரிக் குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருப்ப தால் அதிலிருந்து வரும் துர்நாற்றங்களால் நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், பயணிகளும் முகம் சுழித்து வருகின்றனர்.

    பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் நிழற்குடைக்குள் அமர விரும்பாமல் மூக்கை பிடித்துக்கொண்டு மணிக் கணக்கில் நிழற்குடைக்கு வெளியி லேயே வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகமும், சுகா தாரத்துறை அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிக ளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட் களை ஒழிக்க பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் நரிக்குடி பஸ் நிலையத்தில் பொது இடத்தில் பிளாஸ்டிக் பொருட் களை குவித்து வைத்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வரும் மூதாட்டியை பஸ் நிலை யத்தில் இருந்து அகற்றுவதுடன், அவரது உறவினர்கள் அல்லது காப்பகத்தில் சேர்க்க ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் நரிக்குடி பஸ் நிலையத்தை பொதுமக்கள் மற்றும் பயணிகளின் முழு மையான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வேர்ல்டு விஷன் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான சுமதி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதில் வக்கீல்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×