என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன்,மருத்துவர் மகா கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • பேரணியில் சென்றவர்கள் வெண் புள்ளி நோய் குறித்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    நெல்லை:

    உலக வெண்புள்ளி தினம் நாளை மறுநாள் (25-ந்தேதி) அனுசரி க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் வெண்புள்ளி நோய் முகாம் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி யாக வெண்புள்ளி நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் மற்றும் தோல் நோய் சிறப்பு மருத்துவர் மகா கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் சென்றவர்கள் வெண் புள்ளி நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகை களை ஏந்திச் சென்றனர். பேரணி மருத்துவமனை முன்பு தொடங்கி மருத்துவ மனை வளாகம் முழுவதும் சென்று நிறைவு பெற்றது.பேரணியில் அரசு மருத்துவ மனை மருத்து வர்கள், செவிலி யர்கள் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.

    • பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கேட் கீப்பர் விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, திடீர் என கேட் கீப்பர் அறைக்குள் புகுந்து, 2 தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி, அறைக்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர்.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தீ வைக்க முயற்சி செய்தது நான் தான், வழக்கு போட்டாச்சா? என்று துணிச்சலுடன் கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் அவர் யார் என்று விசாரித்ததில் அவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (25) என்பதும், அவர் கடந்த 19-ந் தேதி இரவில் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் ரெயில்வே கேட் வழியாக வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது ரெயில் வந்ததால் கேட் மூடப்பட்டதும், பிச்சைக்கண்னு கேட்டை திறக்க கோரி ரகளையில் ஈடுபட்டதும், எனினும் ரெயில் சென்ற பிறகே கேட் திறக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் பிச்சைக்கண்ணு நேற்று மூலைக்கரைப்பட்டி அருகே விரளபெருந்செல்வி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்த மூலைக்கரைப்பட்டி போலீசார் கருங்குளத்தில் தலைமறைவாக இருந்த, பிச்சைக்கண்னுவை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜனை தாக்கினார். எனினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை, ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்குவதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

    அடுத்த முதலமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம்.

    நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நடிகர் விஜயை பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

    • ஆயூஸ் மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர்.
    • விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    பாரதீய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினரு மான நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாடு நல்லாயிருக்க வீடு நல்லாயிருக்க வேண்டும் என புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொன்னதை போல் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலை வாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    ஆயூஸ் மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழக த்தில் பயன்பெற்று ள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்ப ட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலை வாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடி க்கைகள் எடுக்கவேண்டும்.

    பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்கு வதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

    தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அடுத்த முதல்-அமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரக்ளுடைய விருப்பம்.

    நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

    நெல்லையில் பருவமழை தவறிவிட்டது. பருவமழை நிலை மாறிவிட்டது. குளங்களில் நீரிருப்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ராஜ்பவன் மாறு வதாக சொல்வது முற்றிலும் தவறு. சில சட்ட திட்டங்களில் மாநில அரசுக்கும் கவர்னருக்கும் சில முரன்பாடுகள் இருக்கிறது. கருணாநிதி காலத்தில் இருந்தே இந்த நிலை நீடித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் நாகராஜன், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், இளைஞரணி பிரபாகரன், காசிராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வீரமா ணிக்கபுரம் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வீரமாணிக்கபுரம் 43-வது வார்டு பகுதியில் சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளது.

    நெல்லை:

    மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட வீரமாணிக்கபுரம் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் நாட்டாண்மை பொன்ராஜ் தலைமையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரி யப்பபாண்டியன், தமிழ்நாடு தேவேந்திரகுல மக்கள் பாதுகாப்பு பேரவை குணா பாண்டியன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கூறும்போது, வீரமாணிக்கபுரம் 43-வது வார்டு பகுதியில் சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளது. ஆனால் இப்பகுதியில் குடிநீர் இணைப்பு, பாதாளச்சாக்கடை, விளையாட்டு பூங்கா, நூலகவசதி உள்ளிட்ட எந்தவித வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை.

    இது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.எனவே உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    • வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.
    • பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சூர்யநமஸ்கார், பிராணயாமா மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார். தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முருகவேல் நாம் தினமும் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி யோகாவின் சிறப்பினை எடுத்துரைத்தார்.

    இதில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன் குமார் மற்றும் பூச்சியம்மாள் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

    • நெல்லை வண்ணார்பேட்டை பொறியியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு நடைபெற்றது.
    • ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    நெல்லை, ஜூன். 22-

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு நடைபெற்றது.

    சாதிக்க வேண்டிய பாதை

    ஸ்காட் கல்விக்குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டி வேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தரையில் இருந்து வானம் வரை படிப்பது தான் பொறியியல். கல்லூரியின் பொறியியல் துறை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வலியுறுத்தும் கருத்துக்கள், அவர்கள் சாதிக்க வேண்டிய பாதை, பெற்றோர்களை மதிப்பது போன்ற கருத்துக்களை பற்றி பேசினார்.

    குறும்பட தொகுப்பு

    மேலும் சர்வதேச அளவில் வாழ்வில் சாதனை படைத்தவர்களின் குறும் படத்தொகுப்பை மாண வர்களுக்கு காட்டினார். மாணவர்கள் முயற்சி, பயிற்சி, பேச்சு, மகிழ்ச்சி, வளர்ச்சி என்ற பயணத் தோடு வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து எப்.எக்ஸ். கல்லூரியில் சாதனை படைத்த கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் கடின உழைப்பு, சாதனை மற்றும் திறமை போன்றவற்றுக்கு மேடையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிழ்ச்சியில் இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி, இயக்குநர் முகமது சாதிக், திறன் மேம்பாட்டு துறை இயக்குநர் பாலாஜி, ஸ்காட் கல்லூரி முதல்வர் ஜஸ்டின், கல்விசார்துறை தலைவர் எல்.ஆர். பிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55).
    • இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55). இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள சர்ச் அருகே சென்றபோது, எதிரோ வந்த மினி லோடு வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதேநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லோடு வேன் அப்பகுதயில் இருந்த தரைபாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் லோடு வேன் டிரைவரான வீரவநல்லூர் தம்பிரான் காலனியை சேர்ந்த காசிதுரை என்பவரது மகன் பிரவீனுக்கும்(20) வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, இறந்த தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த பிரவீனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் வியாபாரி மாரியப்பன்.
    • நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வயல் அருகே நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 41). இவர் நெல்லையில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வயல் அருகே நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அதனை காணவில்லை. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.

    இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எலிசபெத் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் 3-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை பயிலும் மாணவர்களுக்கு யோகாசனத்தின் இன்றிய மையாமை குறித்து விளக்கமளித்து பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து சிறப்புப் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் சூரிய நமஸ்காரம், விருட்சாசனம், வஜ்ராசனம், வீரபத்ராசனம், உஸ்தாசனம், யோகமுத்ரா போன்ற பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    பின்னர் பள்ளியின் பின்னர் பேசிய முதல்வர் எலிசபெத் யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து தொடர்ந்து மாணவர்கள் யோகாசனம் செய்துவர அறிவுறுத்தினர்.

    • விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
    • மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    நெடுங்குளம், தாழை குளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

    இந்த ரெயில்வே கேட்டில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதும், ரெயில்கள் சென்ற பிறகு திறக்கப்படுவதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை விஷ்ணு பணியில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி கேட் கீப்பர் இருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அப்போது விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனையடுத்து மர்ம நபர்கள் அந்த அறையில் இருந்த 2 தொலைபேசிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை அந்த அறையில் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தீ பற்றாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனே அங்கு விரைந்த ரெயில்வே போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை கவிழ்ப்பதற்காக இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து ரெயில்வே கேட் கீப்பர் அறைக்குள் தெரியாமல் நுழைந்து விட்டேன். என் மீது வழக்கு போட்டு விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்த வாலிபரை பிடிப்பதற்காக போலீசார் சாத்தான்குளம் விரைந்து உள்ளனர்.

    • மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை முருகன் செய்து கொண்டிருந்தார்.
    • சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பை முடப்பாலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் முருகன்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அம்பை அம்மையப்பர் கோவில் சன்னதி தெருவில் உள்ள தனியார் பல் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக முருகன் சென்று இருந்தார். மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை அவர் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்த சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதன் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகனின் இடுப்பு பகுதியில் சுவர் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் மருத்து வமனை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×