என் மலர்
திருநெல்வேலி
- 2 வயது சிறுமி பிரீத்தி உள்ளிட்டவர்களை தெருநாய் துரத்தி கண்டித்துள்ளது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை நாய் கடித்து தாக்கியதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
சிங்கை:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பகுதியில் சேக்கிழார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி பிரீத்தி, 6 வயது சிறுவன் மிதில், 13 வயது சிறுவன் சிவசங்கர் ஆகியோரை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் துரத்தி சென்று கண்டித்துள்ளது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 43), காந்திமதி நாதன் (76), வேலம்மாள் (61) ஆகியோரையும் நாய்கள் கடித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நாய் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை கடித்து தாக்கியதாக அப்பகுதி யினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இது சாலையில் செல்லும் சிறுவர்கள் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரையும் கடித்து வருகிறது. நாய் கடித்து காயமடைந்தவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் சிவந்திபுரம் ஊராட்சி இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவே இல்லை. எனவே சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குலசேகரன் பால் எடுத்து கொண்டு களக்காட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
- படுகாயம் அடைந்த குலசேகரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் குலசேகரன் (வயது47). பால் வியாபாரி. நேற்று இவர் கேசவநேரியில் இருந்து பால் எடுத்து கொண்டு களக்காட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அவர் கருவேலங்குளம் அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, மொபட் மீது மோதியது. இதில் குலசேகரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோவை ஓட்டி வந்த கீழக்கருவேலங்குளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளையாட்டுகளில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.
- ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. பிளஸ்-1 மாணவர்கள் ஒலிம்பிக் தொடர்பான பல்வேறு விளை யாட்டு களில் சாதித்தவர்கள் பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். மேலும் ஒலிம்பிக் விளை யாட்டு களில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பல சாத னைகள் படைத்து இந்திய நாட்டிற்குப் பெரு மைகள் பல சேர்த்துள்ள தைப் பற்றி தங்கள் நடிப்புத் திறன் மூலம் எடுத்துரை த்தனர்.
ஒலிம்பிக் தொடர்பான பொது அறிவு வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதில் அளித்த மாணவர்கள் பாராட்டைப் பெற்றனர். பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் வருங்கால ஒலிம்பிக்கில் வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்களும் பங்கேற்று நம் பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்க ளை ஊக்குவித்து பேசினார்
- இருதரப்பினரும் நேற்று மாலை திடீரென மோதிக்கொண்டனர்.
- காயம் அடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்.
இவரது மகன்கள் நவீன்குமார், மணிகண்டன். அதே பகுதியை சேர்ந்த விஜி மகன் சந்துரு. மணலி விளையை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் ஸ்ரீமுத்துக்குமரன் மற்றும் திசையன்விளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் சக்திவேல்.
இவர்களுக்கும் மகாதேவன் குளம் கணேசன் மகன்கள் கசுரன், தர்ஷன், சுடர்ராஜ் மகன் விக்னேஷ், ஜெயசீலன் மகன் பிரவீன். இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இருதரப்பினரும் நேற்று மாலை திடீரென மோதிக்கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரும் அரிவாளாலும், இரும்பு கம்பியாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட னர். இதில் நவீன்குமார், மணிகண்டன், சந்துரு, மற்றொரு தரப்பை சேர்ந்த கசுரன், தர்ஷன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமுத்துக்குமரன், பிரவீன், விக்னேஷ், கசுரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதபடி வேலியிட்டு காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் ஏற்பட்டது.
புண்ணிய திருத்தலத்தலமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்தோ்த் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான 517-வது ஆனிபெருந்தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திரதேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.
நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றிவர, ஆனிப் பெருந்திரு விழாவின் பூர்வாங்க பூஜைகளில் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து கொடி மரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் கிட்டு, உலகநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெறும். கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மீக கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிகர நிகழ்ச்சியாக, ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற் பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- விடுதி காப்பாளர் மாணவிகளை எண்ணும்போது 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாயமானது தெரிய வந்தது.
- 2 மாணவிகள் பள்ளி விடுதியில் இருந்து சுவர் ஏறி குதித்து ஓடிய வீடியோ பதிவுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்வி பயில வருகின்றனர்.
இதனால் மாணவிகளின் வசதிக்காக பள்ளியுடன் சேர்ந்த விடுதியும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் சுமார் 65 மாணவிகள் தங்கி இருந்து கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் ஓய்வு அளிக்கப்பட்டு இரவு 9 மணி முதல் 9.30 மணிக்குள் தூங்க செல்வார்கள்.
அப்போது அனைத்து மாணவிகளும் இருக்கிறார்களா என விடுதி காப்பாளர் உறுதிபடுத்துவார். நேற்று விடுதி காப்பாளர் மாணவிகளை எண்ணும்போது 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாயமானது தெரிய வந்தது.
இதையறிந்த பள்ளியின் தலைமையாசிரியர் மாணவிகள் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பாளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் 2 மாணவிகள் பள்ளி விடுதியில் இருந்து சுவர் ஏறி குதித்து ஓடிய வீடியோ பதிவுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதை வைத்து போலீசார் மாணவிகளை ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இரவில் தீவிரமாக தேடினர். மேலும் அனைத்து ரெயில்வே காவல் நிலையத்திற்கும் மாணவிகள் தொடர்பாக பாளை போலீசார் தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் 2 மாணவிகளும் சேலத்தில் மீட்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டதாக பாளை போலீசாருக்கு இன்று அதிகாலையில் தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக போலீசார் பள்ளிக்கும், மாணவிகளின் பெற்றோருக்கும் போலீசார் தகவலை தெரிவித்ததையடுத்து அவர்கள் நிம்மதியடைந்தனர். இன்று அந்த மாணவிகள் சேலத்தில் இருந்து பாளை போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட உள்ளனர்.
அங்கு மாணவிகளிடமும், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மாணவிகளிடம் விசாரணை நடத்திய பிறகே அவர்கள் ஏன் விடுதியில் இருந்து ஓடினர்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.
நெல்லை:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243 இசட் டி-ன் கீழ் மாவட்டத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் துணை தலைவராக மாவட்ட கலெக்டர் இருப்பார். இவருக்கு உதவிட உதவி திட்ட இயக்குநர்களும் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் இருப்பர்.
உறுப்பினர் தேர்தல்
மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சி களுக்கு, இம்மாவட்டத் திட்டக் குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும். இந்தத் திட்ட குழு உறுப்பின ர்களு க்கான தேர்தல் நெல்லை மாவட்ட த்தில் அறிவிக்க ப்பட்டு இன்று நடைபெற்றது.
ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நகர்புற பகுதிகளுக்கான உறுப்பினர்கள் 10 பேரை தேர்வு செய்து வருவதற்காக தேர்தல் இன்று நடை பெற்றது. 10 உறுப்பினர்களை தேர்வு செய்ய 23 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர்.
முகவர்கள் நியமனம்
நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 வாக்குகள் செலுத்தும் படி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் ஒவ்வொரு வருக்கும் முகவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னி லையில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த தேர்தலின் காரணமாக மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகம் முழு வதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
தேர்தலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து நபர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகளும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வினி யோகம் செய்யப்பட்டுள்ளது.
மாலை 3 மணி வரை நடைபெறும் தேர்தல் காரண மாக வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தல் வாக்குப்பதிவை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா, துணை மேயர் கே.ஆர். ராஜூ, தச்சை மண்டல முன்னாள் சேர்ம னும், 3-வது வார்டு கவுன்சி லருமான தச்சை சுப்பிர மணியன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடா மணி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது.
- விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனித் திருவிழா 1-ந் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி யது.
கொடியேற்றம்
இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
அதன் பின் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து 7.10 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளினார்.
தேரோட்ட விழா
விழாவில் களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா சிவ, சிவ, சிவ, சிவ அரகரா, அரகரா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
விழாவின் 8-ம் நாளான வருகிற 30-ந் தேதி (வெள்ளி க்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு பகவான் வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்த ருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டை யாடுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 3-ந் தேதி (திங்கள் கிழமை) நடைபெறு கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் , கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவி னர் செய்து வருகின்றனர்.
- தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- கால்வாய் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் நிரம்ப மழைப்பொழிவையே பெரிதும் நம்ப வேண்டி உள்ளது.
கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்
மேலும் அதிகப்படியான மழைப்பொழிவால் கிடைக்கும் வெள்ளநீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலில் வீணாக கலக்கும் நிலையே தற்போது வரை தொடர்கிறது.
இதனால் அதிகளவு மழை பெய்யும் போது வெள்ள நீர் கூட சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை இன்று வரை தொடர்கிறது.
வெள்ளக்கால்வாய் திட்டம்
இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறை இணைக்கும் வகையில் தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டம் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழி என்ற இடத்தில் தொடங்கி சேரன்மகாதேவி, தருவை, கண்டித்தான்குளம் வழியாக மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, திசையன்விளை, எம்.எல்.தேரி வரை 75 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த கால்வாய் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.
தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு என 3 நதிகளை இணைக்கும் வகையில் உருவாகும் இந்த திட்டம் ரூ. 938 கோடியே 85 லட்சம் செலவில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் இன்னும் இத்திட்டம் முடியவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
செப்டம்பர் மாதம்
இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 நிலைகளாக பிரித்து பணிகளை செய்து வருகின்றனர். இதில் 3 நிலைகளில் பணிகள் 100 சதவீதம் நிறைவடைத்துள்ளது.
பொன்னாக்குடி அருகே கால்வாயின் 30-வது கிலோ மீட்டரில் 6 வழிச்சாலை பாலம் அமைக்கும் பணியும், திசையன்விளை எம்.எல்.,தேரியில் கால்வாய் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. பாலம் அமைக்கும் பணியை பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பாலம் அமைக்கும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது. கால்வாய் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இந்த பணிகளும் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில் மழை காலத்தில் பெறப்படும் வெள்ள நீரால் 23 ஆயிரத்து 40 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை உருவாகும். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி மக்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதி மக்களும் பயனடைவார்கள் என்றனர்.
- அதிகாரிகள் கடைகளில் நேரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.
- ஆய்வின்போது பிளாஸ்டிக் தட்டு, கவர்கள் என 105 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின்படி மாநகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா ஆகியோர் தலைமையில் டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ரதவீதிகளில் உள்ள கடைகளில் நேரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், செல்லப்பாண்டி மற்றும் சங்கரநாராயணன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் முருகேசன், சாகுல், இளங்கோ ஆகியோர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், பாலு சங்கரநாராயணன் முருகன் அந்தோனி, பெருமாள் ஆகியோர் கடைகள் வணிக நிறுவனங்களில் சோதனை செய்தனர்.
தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், சேக், மேஸ்திரிகள் சிவக்குமார், முருகன், பாலமுருகன் மற்றும் சூர்யா, மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 4 ரத வீதிகளிலும் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், கவர்கள் என 105 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அபராதமாக மொத்தம் ரூ.34,400 விதிக்கப்பட்டது.
- கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- காலநிலை மாற்றத்தால் வறட்சியான இடங்களில் மழையும் பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்றுநடைபெற்றது.கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விவசாயிகள் பலரும் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் மானியமாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் கார்த்திகேயன், காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் இடங்களில் வறட்சியாகவும், வறட்சியான இடங்களில் மழையும் பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் தற்போது காலம் மாறி மழை பொழிந்தது. நெல்லை மாவட்டத்தில் மழை இல்லை. இதனால் விவசாயிகளின் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு எடுத்துரைத்துக ்கப்பட்டுள்ளது, விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து மானூர், கானார்பட்டியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஆபிரகாம் என்பவர் பேசுகையில், "நெல்லை மாவட்டத்தில் வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் மான்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. பல ஆண்டுகளாக மானை பிடிக்க குழு அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னும் எந்த குழுவும் அமைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் தெரிவித்தார்.
அப்போது கலெக்டர் கார்த்திகேயன் குறுக்கிட்டு, நீங்கள் உங்கள் உரிமையை தான் கேட்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு வேலை செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு அதிகாரிகள் எதிரிகள் அல்ல என்று கூறினார்.
- பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன்,மருத்துவர் மகா கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- பேரணியில் சென்றவர்கள் வெண் புள்ளி நோய் குறித்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
நெல்லை:
உலக வெண்புள்ளி தினம் நாளை மறுநாள் (25-ந்தேதி) அனுசரி க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் வெண்புள்ளி நோய் முகாம் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி யாக வெண்புள்ளி நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் மற்றும் தோல் நோய் சிறப்பு மருத்துவர் மகா கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் சென்றவர்கள் வெண் புள்ளி நோய் குறித்து பொது மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகை களை ஏந்திச் சென்றனர். பேரணி மருத்துவமனை முன்பு தொடங்கி மருத்துவ மனை வளாகம் முழுவதும் சென்று நிறைவு பெற்றது.பேரணியில் அரசு மருத்துவ மனை மருத்து வர்கள், செவிலி யர்கள் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்.






