களக்காடு அருகே இன்று நாராயணசாமி கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்

அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.
கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.
கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனித் திருவிழா 1-ந் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி யது.

கொடியேற்றம்

இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

அதன் பின் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து 7.10 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளினார்.

தேரோட்ட விழா

விழாவில் களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா சிவ, சிவ, சிவ, சிவ அரகரா, அரகரா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

விழாவின் 8-ம் நாளான வருகிற 30-ந் தேதி (வெள்ளி க்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு பகவான் வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்த ருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டை யாடுகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 3-ந் தேதி (திங்கள் கிழமை) நடைபெறு கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் , கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவி னர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com