search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை  கலெக்டர் அலுவலகத்தில் திட்டக்குழு நகர்புற பகுதிகளுக்கான உறுப்பினர்  தேர்தல்
    X

    தேர்தலுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தி.மு.க.வினரையும், தேர்தல் பணிகளை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்ததையும் படத்தில் காணலாம். 

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திட்டக்குழு நகர்புற பகுதிகளுக்கான உறுப்பினர் தேர்தல்

    • ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243 இசட் டி-ன் கீழ் மாவட்டத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவின் துணை தலைவராக மாவட்ட கலெக்டர் இருப்பார். இவருக்கு உதவிட உதவி திட்ட இயக்குநர்களும் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் இருப்பர்.

    உறுப்பினர் தேர்தல்

    மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சி களுக்கு, இம்மாவட்டத் திட்டக் குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும். இந்தத் திட்ட குழு உறுப்பின ர்களு க்கான தேர்தல் நெல்லை மாவட்ட த்தில் அறிவிக்க ப்பட்டு இன்று நடைபெற்றது.

    ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நகர்புற பகுதிகளுக்கான உறுப்பினர்கள் 10 பேரை தேர்வு செய்து வருவதற்காக தேர்தல் இன்று நடை பெற்றது. 10 உறுப்பினர்களை தேர்வு செய்ய 23 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர்.

    முகவர்கள் நியமனம்

    நகர்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் 394 பேர் வாக்காளர்களாக தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 வாக்குகள் செலுத்தும் படி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் ஒவ்வொரு வருக்கும் முகவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னி லையில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த தேர்தலின் காரணமாக மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகம் முழு வதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கலெக்டர் ஆய்வு

    தேர்தலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து நபர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தனித்தனி அடையாள அட்டைகளும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வினி யோகம் செய்யப்பட்டுள்ளது.

    மாலை 3 மணி வரை நடைபெறும் தேர்தல் காரண மாக வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தேர்தல் வாக்குப்பதிவை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா, துணை மேயர் கே.ஆர். ராஜூ, தச்சை மண்டல முன்னாள் சேர்ம னும், 3-வது வார்டு கவுன்சி லருமான தச்சை சுப்பிர மணியன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வ சூடா மணி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×