என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திசையன்விளையில் கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு- மேலும் 4 பேர் படுகாயம்
    X

    திசையன்விளையில் கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு- மேலும் 4 பேர் படுகாயம்

    • இருதரப்பினரும் நேற்று மாலை திடீரென மோதிக்கொண்டனர்.
    • காயம் அடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்.

    இவரது மகன்கள் நவீன்குமார், மணிகண்டன். அதே பகுதியை சேர்ந்த விஜி மகன் சந்துரு. மணலி விளையை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் ஸ்ரீமுத்துக்குமரன் மற்றும் திசையன்விளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் சக்திவேல்.

    இவர்களுக்கும் மகாதேவன் குளம் கணேசன் மகன்கள் கசுரன், தர்ஷன், சுடர்ராஜ் மகன் விக்னேஷ், ஜெயசீலன் மகன் பிரவீன். இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இருதரப்பினரும் நேற்று மாலை திடீரென மோதிக்கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரும் அரிவாளாலும், இரும்பு கம்பியாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட னர். இதில் நவீன்குமார், மணிகண்டன், சந்துரு, மற்றொரு தரப்பை சேர்ந்த கசுரன், தர்ஷன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்த அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமுத்துக்குமரன், பிரவீன், விக்னேஷ், கசுரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×