search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanasamy Temple"

    • இந்தாண்டு திருவிழா 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் நாராயணனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

    முக்கூடல்:

    முக்கூடலில் உள்ள பிரசித்தி பெற்ற நாராயணசாமி கோவில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 5 மணிக்கு வருஷாபிஷேகம், கோபுர கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் ஊர்வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் நாராயணனுக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்ன தர்மமும், மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி ஊர்வலமாக வரும். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையும், இரவில் நாராயணர் சப்பர பவனியும், தினசரி இரவில் அன்னதானமும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இரவில் முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    • அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது.
    • விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனித் திருவிழா 1-ந் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி யது.

    கொடியேற்றம்

    இதையொட்டி அதிகாலை யில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

    அதன் பின் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து 7.10 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளினார்.

    தேரோட்ட விழா

    விழாவில் களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யா சிவ, சிவ, சிவ, சிவ அரகரா, அரகரா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

    விழாவின் 8-ம் நாளான வருகிற 30-ந் தேதி (வெள்ளி க்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு பகவான் வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்த ருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டை யாடுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 3-ந் தேதி (திங்கள் கிழமை) நடைபெறு கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் , கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவி னர் செய்து வருகின்றனர்.

    • இளைஞர்கள் உதவியுடன் 200 கிலோ மைதா மாவில் சுமார் 8 ஆயிரம் புரோட்டாக்கள், சைவ குருமா தயாரிக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது.
    • கோவிலில் புரோட்டா அன்னதானமாக வழங்கப்பட்டது முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள பிரசித்திபெற்ற பழமையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் ஆடி மாதம் 10 நாள் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கோவிலில் உச்சிப்படிப்பு நடைபெற்ற நிலையில், 7-ந் திருநாளான நேற்று நாராயணர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவில் புதிய முயற்சியாய், பக்தர்களுக்கு அன்னதானமாக புரோட்டா வழங்கப்பட்டது.

    இதற்காக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் 200 கிலோ மைதா மாவில் சுமார் 8 ஆயிரம் புரோட்டாக்கள், சைவ குருமா தயாரிக்கப்பட்டு அன்னதானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து முக்கூடல் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    கோவிலில் புரோட்டா அன்னதானமாக வழங்கப்பட்டது முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    • பிரசித்திப்பெற்ற முக்கூடல் நாராயணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    முக்கூடல்:

    பிரசித்திப்பெற்ற முக்கூடல் நாராயணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 14-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. 1-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு வருஷாபிஷேகம், கோபுர கொடி ஏற்றம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி எடுத்து வரப்பட்டது. இரவில் சப்பர பவனி நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலை வந்தடையும்.

    அதனை தொடர்ந்து இரவில் நாராயணர் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்த்தில் முக்கூடல் நகரை வலம் வருதல் நடைபெறுகிறது. 10-ம் திருநாள் அன்று லட்சுமி நாராயணர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை சொற்பொழிவு, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பக்தி இசை, இலக்கிய சொற்பொழிவு, பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, சிலம்பம் நடைபெறுகிறது.

    13-ந் தேதி இரவு சிவச்சந்திரனின் அய்யாவழி இசை வழிபாடு, விடிய, விடிய அன்னதானம் நடைபெறும். மேலும் அனுமன் ஆட்டம், மாடு, மயில் ஆகிய ஆட்டங்கள் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ விஷ்ணு சபையார், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். 

    ×