search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதையும், அதில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

    நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

    • கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • காலநிலை மாற்றத்தால் வறட்சியான இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்றுநடைபெற்றது.கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய விவசாயிகள் பலரும் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் மானியமாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் கார்த்திகேயன், காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் இடங்களில் வறட்சியாகவும், வறட்சியான இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

    குறிப்பாக சென்னையில் தற்போது காலம் மாறி மழை பொழிந்தது. நெல்லை மாவட்டத்தில் மழை இல்லை. இதனால் விவசாயிகளின் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு எடுத்துரைத்துக ்கப்பட்டுள்ளது, விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தொடர்ந்து மானூர், கானார்பட்டியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஆபிரகாம் என்பவர் பேசுகையில், "நெல்லை மாவட்டத்தில் வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாய நிலங்களில் மான்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. பல ஆண்டுகளாக மானை பிடிக்க குழு அமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னும் எந்த குழுவும் அமைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் தெரிவித்தார்.

    அப்போது கலெக்டர் கார்த்திகேயன் குறுக்கிட்டு, நீங்கள் உங்கள் உரிமையை தான் கேட்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு வேலை செய்யும் அதிகாரிகள். விவசாயிகளுக்கு அதிகாரிகள் எதிரிகள் அல்ல என்று கூறினார்.

    Next Story
    ×