என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான ஆசிரியர்கள் திகழ வேண்டும்

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஸ்காட் கல்வி குழும நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்கப்படுத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'ஆசிரியர் பணியே சிறந்தது' என்ற தலைப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாணவ செல்வங்களை சிற்பிகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் சிறப்பான பங்கை, சாதனை படைத்த ஆசிரியர்களின் வரலாற்றை குறும்படம் மூலம் ஆசிரியர்களுக்கு காட்டினார். சமூகத்தில் மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான அஸ்தி வாரமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்று தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களை வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபால்ராயன், பாலாஜி, கல்லூரி முதல்வர்கள் ஜஸ்டின், ஜாஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும்

    எப்.எக்ஸ்.ஸ்காட் பாலி டெக்னிக், பி.எட். ஐ.டி.ஐ. நிறுவனம் மற்றும் எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளி, குட் ஷெப்பர்ட் பள்ளி முதல்வர்கள் பேராசிரி யர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • அங்கீகாரம் பெற்ற கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.
    • விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தில் பல்கலைக் கழக மானியக்குழுவின் தொலைதூர கல்விக்குழு அங்கீகாரத்துடன் இளங் கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளா தாரவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இளநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முதுகலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல் மற்றும் முதுநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி ஆகும். இந்த பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் நேரடி சேர்க்கை மையங்களான, பல்கலைக்கழக வளாகம், அபிசேகப்பட்டி மற்றும் கோவிந்த பேரி- சேரன்மகாதேவி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம் பட்டி, ஆகிய ஊர்களில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி களிலும், இப்பல் கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடை பெற்று கொண்டிருக்கிறது.

    மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வாயிலாக பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் www.msuniv.ac.in/Distance-Education சேர்க்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் இளநிலை, முதுநிலை , சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கத்துரை தனது வீட்டை பேச்சிமுத்து என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.
    • தங்கத்துரைக்கும் உமா மகேஸ்வரிக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் தங்கத்துரை. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள வீட்டை வக்கீலான பேச்சிமுத்து(வயது 33) என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்நிலையில், தங்கத்துரைக்கும் அவரது சகோதரியான சுரண்டையில் வசித்து வரும் உமா மகேஸ்வரிக்கும்(வயது 26) சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் பாலாஜி அவென்யூவில் உள்ள வீடு தனக்கு சொந்தமானது என்று உமா மகேஸ்வரி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பேச்சிமுத்து முறைப்படி வாடகை செலுத்தி வருவதாகவும், தன்னை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி அந்த வீட்டின் கதவில் முட்டைகளை வீசியும், மின்சார பெட்டியை உடைத்தும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட உமா மகேஸ்வரியை கைது செய்தனர்.

    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை ஆணையர் சுமதி, உதவி ஆணையர் முருக பிரசன்னா, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் நடைபெற்றது. இதில் ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    9 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. பேச்சு போட்டியானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் ஒரு பள்ளியில் ஒரு மாணவர்்் மட்டுமே கலந்து கொண்டு 4 நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

    நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 46 பள்ளிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகள் தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.

    முடிவில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இன்று நடந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அலுவலர் லெனின் செய்திருந்தார்.

    • கொடைவிழாவில் மேளம் அடிக்குமாறு கூறி வேலாயுதம் தகராறு செய்துள்ளார்.
    • வேலாயுதம், அவரது தம்பி சுடலைகுமார் ஆகியோர் சேர்ந்து கண்ணனை தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியில் கோவில் கொடை விழா நடந்தது. விழாவின் போது அதே ஊரை சேர்ந்த வேலாயுதம் (வயது 23) மேளம் அடிக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனை கண்ணன் (30) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று கண்ணன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த வேலாயுதம், அவரது தம்பி சுடலைகுமார் (22) ஆகியோர் சேர்ந்து கண்ணனை தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சகோதரர்களை வலைவீசி தேடி வருகிறார்.

    • நிகழ்ச்சியானது நாளை மறுநாள் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
    • போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை நிகழ்ச்சியில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் "உயர்வுக்கு படி" என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியானது நாளை மறுநாள்(செவ்வாய்க் கிழமை) வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 4-ந்தேதி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டல், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணம், உயர்கல்வியில் சேருவதற்கு வங்கிகளால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசு பணியில் சேருவத ற்கான போட்டித் தேர்வு களும், அதனை அணுகும் முறை மற்றும் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

    மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி, கல்லூரி கனவு சிற்றேடுகள் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் சமூக நலப் பாதுகாப்புத் திட்ட ங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் பழங்குடி யினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் உதவித்தொகை திட்டங்கள், இட ஒதுக்கீடு, மாணவர்க ளுக்கான இலவச விடுதி வசதிகள் போன்ற தகவல் களும், ஆலோ சனைகளும் வழங்கப்பட உள்ளது. மாண வர்களும், பெற்றோர்களும் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • யானையானது நன்றாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்து கொள்கிறது.
    • வனத்துறை கால்நடை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே யானை தொடர்ந்து இருந்து வருகிறது.

    நெல்லை:

    கேரளாவிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

    அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, யானையை டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை ஏற்கனவே இருந்த சீதோசண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோசண நிலைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

    இந்நிலையில் யானையின் மெலிந்த உடல் குறித்த புகைப்படங்களின் உண்மை தன்மை குறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறியதாவது:-

    அரிசி கொம்பன் யானை நலமுடன் உள்ளது. மெலிந்த நிலையில் இருந்தாலும், உடல் உறுப்புகள் நல்ல நிலையிலேயே உள்ளது. முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உடல் உப்பிசமாக காணப்பட்டது. தற்போது காட்டு உணவு, புல் வகைகளை சாப்பிடுவதால் வனவிலங்குகளுக்கே உரித்தான உடல் வாகுக்கு அரிசி கொம்பன் வந்து கொண்டிருக்கிறது. காட்டு விலங்குகள் இப்படித்தான் இருக்கும்.

    யானையானது நன்றாக உணவு மற்றும் தண்ணீர் எடுத்து கொள்கிறது. நன்றாக நடக்கிறது. வனத்துறை கால்நடை டாக்டர்களின் கண்காணிப்பிலேயே யானை தொடர்ந்து இருந்து வருகிறது. தொலைதூரத்தில் இருந்து அதாவது 100 மீட்டர் தொலைவில் இருந்து புகைப்படம் எடுத்ததால் யானை உடல் மெலிந்து காணப்படுவதைபோல் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடராஜா் சன்னதி தாமிரசபை என்று அழைக்கப்படுகின்றது.
    • அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனித் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்து ள்ளது ராஜ வல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில். இங்கு மூலவராக ஸ்ரீ நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் அருள் பாலித்து வருகின்றனா்.

    கொடியேற்றம்

    இங்குள்ள நடராஜா் சன்னதி தாமிர சபை என்று அழைக்கப்படுகின்றது. மகா விஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாம தேவரிஷி, மணப்படை வீடு அரசன் ஆகியோர்களுக்கு சிவபெருமான் தனது நடன தரிசனம் கொடுத்த சிறப்பு டையது ஆகும். அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆனித் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகன ங்களில் வீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் ஸ்ரீநடராஜ பெருமான் தாமிர சபையில் இருந்து திருவிழா மண்டபத்திற்கு ஏழுந்தருளல் நடைபெற்று தொடா்ந்து சிகப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி தாிசனம் நடை பெற்றது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி யெழுச்சி தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழா மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிசேகமும், பின்னர் தீபாராதனையும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து சுவாமி செப்பு கேடையத்தில் தேருக்கு எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் கோவிலில் 4 ரதவீதிகளையும் வலம் வந்து நிலையத்தை அடைந்தது. தேரோடும் வீதிகளில் சிவபக்தர்கள் பஞ்சவாத்தியம் வாசித்து தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தில் பல்வேறு கிராமமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா நாளை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பரமேஸ்வரபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் தெருமுனை பிரசாரம் கூட்டம் நடைபெற்றது.
    • 9 ஆண்டுகால ஆட்சியில் மோடி தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    பணகுடி:

    ராதாபுரம் தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் பரமேஸ்வரபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் தெருமுனை பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கேசவன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய பொதுச்செயலாளர் ஆர்.கே. சாமி முன்னிலை வகித்தார். பிரசார பிரிவு மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் இந்திராசுரேஷ், செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஆன்மிக பிரிவு தலைவர் ராமகுட்டி, ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆத்திராஜா, ஒன்றிய துணை தலைவர் ராஜா, பிரசார பிரிவு ஒன்றிய தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதை காமராஜ், மூத்த நிர்வாகி முத்துதுரை, நாகராஜன், அன்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச்செயலாளர் ஆர்.கே. சாமி செய்திருந்தார் முடிவில் கிளை தலைவர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

    • கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.
    • 2-ம் ஆண்டு மாணவிகள் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூ, இனிப்பு, பேனா வழங்கி வரவேற்றனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் டி.டி.என்.கல்விக்குழுமம் சார்பில் மரியா கலை மற்றும் அறிவி யல் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கு மாணவிகள் சேர்ந்துள்ளனர். இம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் வழிகாட்டுதல், புத்தொளி பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வள்ளியூர் புனித பாத்திமா திருத்தல பங்கு தந்தை ஜாண்சன் அடிகளார் ஜெபம் செய்து ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.

    டி.டி.என்.கல்விக்குழு மங்களின் நிறுவனர் டி.லாரன்ஸ் முன்னிலை வகித்தார். டி.டி.என்.கல்விக் குழுமங்களின் நிர்வாகி ஸ்டேன்லி வரவேற்று பேசி னார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புல முதல்வர் ராஜலிங்கம், மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் புத்தொளி பயிற்சி உரையாற்றினர்.

    டி.டி.என்.கல்விக்குழு நிர்வாகி ஒலிவா, சமூகரெங்கபுரம் ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்ஸன், நேரு நர்ஸிங் கல்லூரி முதல்வர் மார்க்க ரெட் ரஞ்சிதம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி வரவேற்று பேசினர்.

    முன்னதாக 2-ம் ஆண்டு மாணவிகள் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூ, இனிப்பு, பேனா வழங்கி வரவேற்றனர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் நன்றி கூறினார். ஏற்பாடு களை கல்லூரி பேராசிரியைகள் செய்திருந்தனர்.

    • தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    பேனர்கள் அகற்றம்

    அதன் பேரில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் இன்று 4 மண்டலங்களிலும் பிளக்ஸ், பேனர்களை அகற்ற அவர் உத்தரவிட்டிருந்தார்.

    மாநகர பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அந்தந்த பகுதி மண்டல அலுவலர்கள் கணக்கெடுத்து அவற்றில் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டவை களை அகற்றும்படி அவர் தெரிவித்திருந்தார்.அதன் பேரில் கடந்த சில வாரங்களாக மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    டவுன் ரத வீதிகளில்...

    இந்நிலையில் நெல்லை யப்பர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ரத வீதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.இதையடுத்து அவற்றை அகற்றும் பணி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் இன்று நடைபெற்றது.

    டவுனில் 4 ரத வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமலும் வைக் கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மனோஜ், சேக், முத்துராஜ், மாரியப்பன் ஆகியோர் அகற்றி மாநகராட்சி குப்பை லாரியில் ஏற்றிச் சென்றனர்.

    • எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வு பணியில் மின் வாரிய அலுவலர்கள், வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    சிங்கை:

    நெல்லை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள பாபநாசம் கீழ் முகாம் பிரிவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் மின்வாரியம் மற்றும் வனத்துறை சார்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அலுவலர்கள் இணைந்து மின் பாதைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமியின் வழிகாட்டுதலின்படி மின்வாரிய செயற்பொறியாளர் சுடலையடும் பெருமாள் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பாபநாசம், சேர்வலார், காரையார் பகுதிகளில் வனவிலங்குகள் மின் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு பணியில் மின் வாரியம் சார்பில் அம்பை உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ், பாபநாசம் இளநிலை பொறியாளர் விஜயராஜ், விக்கிரமசிங்கபுரம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், முகவர் முருகன் மற்றும் வனத்துறை சார்பில் பாபநாசம் வன காப்பாளர் செல்வன், முண்டந்துறை வனவர் ராஜன், வன காப்பாளர் சமீர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×