ராதாபுரம் அருகே பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

பரமேஸ்வரபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் தெருமுனை பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. 9 ஆண்டுகால ஆட்சியில் மோடி தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தெருமுனை பிரசாரம் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
தெருமுனை பிரசாரம் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
Published on

பணகுடி:

ராதாபுரம் தெற்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் பரமேஸ்வரபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கும் தெருமுனை பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கேசவன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய பொதுச்செயலாளர் ஆர்.கே. சாமி முன்னிலை வகித்தார். பிரசார பிரிவு மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் இந்திராசுரேஷ், செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஆன்மிக பிரிவு தலைவர் ராமகுட்டி, ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆத்திராஜா, ஒன்றிய துணை தலைவர் ராஜா, பிரசார பிரிவு ஒன்றிய தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதை காமராஜ், மூத்த நிர்வாகி முத்துதுரை, நாகராஜன், அன்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச்செயலாளர் ஆர்.கே. சாமி செய்திருந்தார் முடிவில் கிளை தலைவர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com