search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை பல்கலையில் தொலைநெறி தொடர்கல்வி மாணவர் சேர்க்கை- ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
    X

    நெல்லை பல்கலையில் தொலைநெறி தொடர்கல்வி மாணவர் சேர்க்கை- ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    • அங்கீகாரம் பெற்ற கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.
    • விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தில் பல்கலைக் கழக மானியக்குழுவின் தொலைதூர கல்விக்குழு அங்கீகாரத்துடன் இளங் கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளா தாரவியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இளநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முதுகலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல் மற்றும் முதுநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி ஆகும். இந்த பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் நேரடி சேர்க்கை மையங்களான, பல்கலைக்கழக வளாகம், அபிசேகப்பட்டி மற்றும் கோவிந்த பேரி- சேரன்மகாதேவி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம் பட்டி, ஆகிய ஊர்களில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி களிலும், இப்பல் கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடை பெற்று கொண்டிருக்கிறது.

    மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வாயிலாக பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் www.msuniv.ac.in/Distance-Education சேர்க்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் இளநிலை, முதுநிலை , சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×