search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்காட் கல்வி குழும நிறுவன ஆசிரியர்களுக்கு ஊக்கப்படுத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கு
    X

    ஆசிரியர்களுக்கான ஊக்கப்படுத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஸ்காட் கல்வி குழும நிறுவன ஆசிரியர்களுக்கு ஊக்கப்படுத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கு

    • சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான ஆசிரியர்கள் திகழ வேண்டும்

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஸ்காட் கல்வி குழும நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்கப்படுத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'ஆசிரியர் பணியே சிறந்தது' என்ற தலைப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாணவ செல்வங்களை சிற்பிகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் சிறப்பான பங்கை, சாதனை படைத்த ஆசிரியர்களின் வரலாற்றை குறும்படம் மூலம் ஆசிரியர்களுக்கு காட்டினார். சமூகத்தில் மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான அஸ்தி வாரமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்று தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களை வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபால்ராயன், பாலாஜி, கல்லூரி முதல்வர்கள் ஜஸ்டின், ஜாஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும்

    எப்.எக்ஸ்.ஸ்காட் பாலி டெக்னிக், பி.எட். ஐ.டி.ஐ. நிறுவனம் மற்றும் எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளி, குட் ஷெப்பர்ட் பள்ளி முதல்வர்கள் பேராசிரி யர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    Next Story
    ×