என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கார்த்திகேயன்
நெல்லையில் உயர்கல்வி படிப்பவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி- கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
- நிகழ்ச்சியானது நாளை மறுநாள் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
- போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை நிகழ்ச்சியில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் "உயர்வுக்கு படி" என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியானது நாளை மறுநாள்(செவ்வாய்க் கிழமை) வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 4-ந்தேதி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டல், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணம், உயர்கல்வியில் சேருவதற்கு வங்கிகளால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசு பணியில் சேருவத ற்கான போட்டித் தேர்வு களும், அதனை அணுகும் முறை மற்றும் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி, கல்லூரி கனவு சிற்றேடுகள் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் சமூக நலப் பாதுகாப்புத் திட்ட ங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் பழங்குடி யினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் உதவித்தொகை திட்டங்கள், இட ஒதுக்கீடு, மாணவர்க ளுக்கான இலவச விடுதி வசதிகள் போன்ற தகவல் களும், ஆலோ சனைகளும் வழங்கப்பட உள்ளது. மாண வர்களும், பெற்றோர்களும் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






