என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.
    • போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    மின்வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டு களுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றும் விதமாக ஒப்பந்த ஊழிய ர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் இன்று பாளை தியாகராஜ நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செய லாளர் முருகன் தொடக்க உரையாற்றினர். கோட்ட செயலாளர்கள் மந்திர மூர்த்தி, இளைய ராஜா, சிவராஜ், வேல்முருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திட்ட செய லாளர் கந்தசாமி, பொரு ளாளர் நாகையன் தென்காசி மாவட்ட செய லாளர் அயூப் கான் உள்ளிட்டோர் விளக்க வுரை ஆற்றினர். மாநிலச் செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார்.

    • காந்திபுரத்தில் நடந்த காளிபூஜையில் கலந்து கொள்ள ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    களக்காடு:

    மாவடி, உடையடிதட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் டோனாவூர் அருகே உள்ள காந்திபுரத்தில் நடந்த காளிபூஜையில் கலந்து கொள்ள தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தசரா குழு பிறை அருகே நிறுத்தி விட்டு, காளி பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர் திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளியின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.
    • தப்பி ஓடியவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம் வடமநேரி குளத்தில் ரோந்து சென்றனர்.

    அப்போது குளத்தில் சிலர் ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். இதைப்பார்த்த போலீசார் தப்பி ஓடியவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் சிதம்பர புரத்தை சேர்ந்த பாலையா மகன் செல்வ குமார் (வயது 20), வீராங்குளத்தை சேர்ந்த சண்முக வேல் மகன் ஸ்ரீரெங்கமூர்த்தி (26), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விவேகநாதன் மகன் பாலதுளசிமணி (34), செங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாரிசெல்வம் (50), நடுச்சாலைப்புதூரை சேர்ந்த கணேசன் மகன் அஜிஸ் (26) என்பதும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மண் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் 2 ஜே.சி.பி எந்திரங்களையும், 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

    • இசக்கிபாண்டிக்கும், இசக்கி துரைக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • ஆத்திரம் அடைந்த இசக்கி துரை, இசக்கி பாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பி தலைவன்பட்டயம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 32).

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இசக்கி துரைக்கும் (39) தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இசக்கிபாண்டி அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கி துரைக்கும் அவரு க்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி துரை, இசக்கி பாண்டியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப் படுகிறது. இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீ சில் புகார் செய்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக இசக்கி துரையை தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனை சாவடியில் தினமும் இரவு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வழியாக கேரளாவுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் அந்த வாகனங்களில் டிரைவர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பால் சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ குழுவினர் புளியரை சோதனை சாவடிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இரவு பணியை முடித்துவிட்டு காரில் புறப்பட்ட பாளை பெருமாள்புரத்தைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி (வயது 58) என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக ஞானகுமாரி இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்து உள்ளார். அவரிடம் இருந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து பிரேமா ஞானகுமாரியிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக பெருமாள்புரத்தில் கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.
    • சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை:

    ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி சென்னையில் இருந்து இன்று இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு ரெயில் நெல்லை வந்து சேரும்.

    ரெயிலில் உள்ள சாதாரண படுக்கை பெட்டி மற்றும் எக்கனாமிக் ஏசி கிளாஸ் ஆகியவையின் முன்பதிவு டிக்கெட்டுகள் நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    நெல்லையில் இருந்து 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.35 மணிக்கு ரெயில் புறப்பட்டு 25-ந் தேதி அதிகாலை 4.20 மணிக்கு சென்னை சென்றடையும். ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    தொடர் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிகமானோர் சொந்த ஊருக்கு வருகை தரும் நிலையை கருத்தில் கொண்டு புதிய சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.

    சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை-சென்னை இடையேயான பெரும்பாலான ரெயில்களில் ஏற்கனவே டிக்கெட் விற்றுத்தீர்ந்த நிலையில் சிறப்பு ரெயிலிலும் டிக்கெட் முடிவு பெற்றது.

    • முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் (18), முத்தரசன் (20) ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
    • நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த ரஸ்தாவூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (வயது 22). அதே பகுதி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அரி செல்வம் மகன் மகாராஜன் (18), தியாகராஜர் தெருவை சேர்ந்த சேகர் மகன் முத்தரசன் (20). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

    பைக் ரேஸ்

    நேற்று இரவு முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரையில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய 2 பேரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரின்ஸ் மோட்டார் சைக்கிளில் பின்னால் மகாராஜன் அமர்ந்துள்ளார். அவர்கள் சேரன்மகா தேவி விலக்கு பகுதிக்கு சென்று விட்டு அங்கிருந்து முக்கூடலை நோக்கி மீண்டும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரம் பொட்டல் காலனி பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே மருந்து விற்பனை பிரதிநிதிகளான களக்காடு சிங்கம்பத்து பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (42), டவுன் பாரதியார் தெருவை சேர்ந்த பொன்ராஜ் (42) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    வாலிபர் பலி

    அப்போது அவர்கள் மீது பிரின்ஸ் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த முத்தரசன் மோட்டார் சைக்கிளும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மகாராஜன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சதக்கத்துல்லா, பொன்ராஜ், பிரின்ஸ், முத்தரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மகாராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பேரின்பம், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, அனார்கலி, மாரியப்பன் மற்றும் கோவில் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல் பாலாஜி, சீனிவாசன் ராம புத்திரன், ஆறுமுகம், நையன்சிங் மற்றும் தி.மு.க. பிரமுகர் அப்துல் சுபஹானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார்.

    களக்காடு:

    கோவையை சேர்ந்தவர் செந்தூர். இவருக்கு சொந்தமான தோட்டம் களக்காடு அருகே பத்மநேரியில் உள்ளது. இந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணபதிராமன் (வயது 33) மேற்பார்வையாளராக உள்ளார். சம்பவத்தன்று தோட்டக்குடியை சேர்ந்த சுடலைக்கண்ணு, பத்மநேரியை சேர்ந்த பிச்சையா, வானுமாமலை, பாவநாசம் என்ற இசக்கிமுத்து மற்றும் 5 பேர் உள்பட 9 பேர் சேர்ந்து செந்தூரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்த கணபதிராமன் தட்டிக்கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சுடலைக்கண்னு உள்பட 9 பேரும் சேர்ந்து, கணபதிராமனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுடலைக்கண்னு உள்பட 9 பேரை தேடி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போட்டியும் நடைபெற்றது.
    • போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்ட பள்ளி மாணவ- மாணவர்க ளுக்கான மாவட்ட அளவி லான கைப்பந்து போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கான கைப்பந்து போட்டியும், பெண்க ளுக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது.

    போட்டியினை வள்ளியூர் டி.டி.என். கல்வி குழும தலைவர் லாரன்ஸ், தாளா ளர் ஹெலன் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    நெல்லை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியின் ஒருங்கிணைப் பாளர் லில்லி வரவேற்று பேசினார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அம்பாச முத்திரம் பி.எல்.ட.பி.ஏ. மேல் நிலைப்பள்ளி மாணவி கள் முதலிடம் பெற்றனர்.

    ஆவரைகுளம் பாலை மார்த்தாண்டம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடம் பெற்றனர். 17 வய துக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சங்கர் நகர் கீதா கிருஷ்ணமூர்த்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலி டத்தையும், பாளையங் கோட்டை சின்மயா வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பெற்றனர்.

    19 வயதுக்குட்பட்டோ ருக்கான பிரிவில் அம்பா சமுத்திரத்தில் உள்ள பாபநாச தொழிலாளர் நல உரிமைக்கழக மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து அசத்தி னர். 2-ம் இடத்தையும் பாளையங்கோட்டை சாரா டக்கர் பெண்கள் மேல் நிலை ப்பள்ளி மாணவிகள் பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற அணி யினர் மாநில அளவி லான போட்டிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கான சான்றிதழ்க ளையும் வெற்றி கேடயங்களையும் கல்லூரி யின் தலைவர் லாரன்ஸ் வழங்கி, மாணவிகளின் திறனை பாராட்டி தனது வாழ்த்துக் களை தெரி வித்துக் கொண்டார்கள்.

    இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24).
    • வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார் குளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேல்சக்தி. தொழிலாளி. இவரது மனைவி தவசிகனி (வயது 24). சம்பவத்தன்று வேல்சக்தி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த தவசிகனி தனது நகையை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, தனது 3 வயது மகனுடன் மாயமானார்.

    வீட்டிற்கு திரும்பி வந்த வேல்சக்தி மனைவி மற்றும் மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான தவசிகனியை தேடி வருகின்றனர்.

    • ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாமா வரவேற்று பேசினார். முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை நிபுணர், மனநல மருத்துவர், முட நீக்கியல் நிபுணர் கலந்து கொண்டு குழந்தைகளை பரிசோதனை செய்தனர். முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம், இலவச பஸ் பயண சலுகை, இலவச ரயில் பயண சலுகை, உதவி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மாத உதவி தொகை ஆகியவை வழங்கப்பட்டன.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×