என் மலர்
திருநெல்வேலி
- சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
- பிடிபட்ட வாலிபர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நேரில் வரவழைத்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை புறவழிச்சாலை, மன்னார்புரம்-இட்டமொழி சாலை பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மோட்டார் சைக்கிள்கள் சைலன்சர்களை கழற்றி வைத்து விட்டு அதிக ஒலியுடன் வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார் சென்றது.
இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட அப்புவிளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமரன் மகன் சிவா (வயது 20), ஆயன்குளம் பீர்முகமது மகள் சேக் முகமது (20), சுப்பிரமணியபுரம் செல்வகுமார் மகன் ராகுல்(18), திசையன்விளை காமராஜர் நகர் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்துரு(18) ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்பு அவர்களுக்கு தலா ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலித்தனர். மேலும் பிடிபட்ட வாலிபர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நேரில் வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வர்ணம் பூசி அழித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி மானூர் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குபட்டி, சீதக்குறிச்சி, இரண்டும் சொல்லான், கட்டாரங் குளம், எட்டான்குளம், தெற்கு வாகைகுளம், களக்குடி, திருமலாபுரம், மடத்தூர், ஆகிய பகுதியில் 112 மின்கம்பங்கள், 3 நீர்தேக்க தொட்டிகள், 5 பாலங்கள், ஒரு மரம், 2 பஸ் நிறுத்தங்கள், ஒரு கிணறு, ஒரு குடி தண்ணீர் பை ஆகிய இடங்களிலும், சுத்தமல்லி போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட சுத்தமல்லி, சங்கன்திரடு, நரசிங்க நல்லூர், பட்டன் கல்லூர் ஆகிய பகுதியில் 30 மின்கம்பங்களிலும்,
பத்தமடை போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பத்தமடை பிள்ளையார் கோவில் தெரு, மங்கை யர்க்கரசி தெரு பகுதியில் 33 மின்கம்பங்களிலும், மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலைய சரகத்திற்கு ட்பட்ட முனைஞ்சிப்பட்டி பகுதியில் 5 மின்கம்பங்களிலும் என ஒரே நாளில் 95 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வர்ணம் பூசி அழித்தனர். நெல்லை மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழித்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
- அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர்கள் நினைவு தினம் கடை பிடிக்கப்படுகிறது.
- 189 பேருக்கு மரியாதை செலு த்தும் நிகழ்ச்சி மாவட்ட ந்தோறும் இன்று நடைபெற்றது.
நெல்லை:
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர்கள் நினைவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தப்படும்.
அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை பணியின் போது உயிரிழந்த வர்களுக்கு இன்று வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்படி தமிழக காவலர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 189 பேருக்கு மரியாதை செலு த்தும் நிகழ்ச்சி மாவட்ட ந்தோறும் இன்று நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவலர்கள் நினைவு சின்னம் முன்பாக 30 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான (பொறுப்பு) பிரவேஷ்குமார் கலந்து கொண்டு மலர்வ ளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பர சன், மாநகர போலீஸ் துணை கமிஷ னர்கள் தலைமையிடம் அனிதா, கிழக்கு மண்டலம் ஆதர்ஷ் பசேரா, மேற்கு மண்டலம் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
- மணிகண்டன் புகையிலை பொருட்களை கடத்தி வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- பெயிண்டர் லட்சுமணன் என்பவரிடம் இசக்கி பாண்டி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் உடையார். இவரது மகன் இசக்கி பாண்டி (வயது21). இவரது கார் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இசக்கிபாண்டிக்கு தெரியாமல் காரை எடுத்து சென்ற மணிகண்டன் புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்தபோது மானூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இசக்கி பாண்டி ஆத்திரத்தில் மணிகண்டன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மணிகண்டனின் மாமனார் பெயிண்டர் லட்சுமணன் (58) என்பவரிடம் தகராறு செய்து தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி பாண்டியை கைது செய்தனர்.
- சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியிட மாறுதலில் சென்றார்.
- பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். இவர் நெல்லை மாநகராட்சியின் 30-வது கமிஷனர் ஆவார். அவர் இன்று காலை பொறுப்பேற்ற பின்னர் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் துரிதப் படுத்தப்படும். மாநகர பகுதியில் மழைநீரானது சாலைகளில் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொ ள்ளப்படும். பஸ் நிலை யங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். புதிதாக கட்டப்பட்டு வரும் சந்திப்பு பஸ் நிலைய கட்டிட பணியை விரைந்து நிறைவு செய்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து புதிய கமிஷ னர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை துணை கமிஷ னர் தானுமூர்த்தி, உதவி கமிஷனர்கள், பொறி யாளர்கள், சுகாதார அலுவ லர்கள், சுகாதார ஆய்வா ளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.
- பிரதீப் மீது அடிதடி, களவு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- கொலை மிரட்டல் வழக்கில் பாளை மத்திய சிறையில் பிரதீப் அடைக்கப்பட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பிரதீப் (வயது24). இவர் மீது போலீஸ் நிலையங்களில் அடிதடி, களவு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கொலை மிரட்டல் வழக்கில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு பரிந்துரைத்தார். தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பிரதீப் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
- களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் மைக்கேல் ஜெரோன் பிளஸ்-2 படித்து வந்தார்.
- மைக்கேல் ஜெரோன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு, சரோஜினி புரத்தை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் கேரளாவில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தனபிரபா. இவர்களது மகன் மைக்கேல் ஜெரோன் (வயது18). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் இவர் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். இதற்கான பயிற்சி வகுப்பில் சேர பணம் இல்லாததால் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று மதியம் மைக்கேல் ஜெரோன் வீட்டில் உள்ள அறையில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்ய ப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்ச மால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்க சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்னேஷ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணி மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
- கற்பக விநாயகத்திற்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விஜயலெட்சுமி. இவர்களுக்கு கற்பகவிநாயகம் (வயது27), விக்னேஷ் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் விக்னேஷ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணி மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கற்பக விநாயகத்திற்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூங்க சென்ற கற்பக விநாயகம், நேற்று மாலை வரை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறையில் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று கற்பக விநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடை கோட்டார் பகுதியை சேர்ந்தவர் காதர் (வயது44). இவரது மனைவி பவினா (42). இவர்களுக்கு அப்ரா (21) என்ற மகளும், அப்துல்லாகான் (19) என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் நேற்று நெல்லைக்கு காரில் வந்திருந்தனர். பின்னர் இரவில் மீண்டும் அவர்கள் 4 பேரும் காரில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். காரை அப்துல்லாகான் ஓட்டிச்சென்றார். நள்ளிரவு நேரத்தில் நாங்குநேரி டோல்கேட்டை கடந்து தனியார் உணவகம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் இடது புறத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் சென்ற வேகத்தில் கவிழ்ந்து பின்னர் நேராக மாறியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் காதர் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், பவினா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவினாவின் குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பவினா பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
- விவசாயிகள் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா முன்னிலை வகித்தார். இதில் வேளாண் இணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயி களிடையே கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
நடப்பு ஆண்டில் மழை குறைவு
நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 41.48 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 37.35 சதவீதம் கூடுதலாகும். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் முடிய 270.90 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 17.65 சதவிகிதம் குறைவாகும். கடந்த 5 ஆண்டு சராசரி மழையுடன் ஒப்பிடும் போது 41.12 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 பருவக்காலங்களில் ஏற்பட்ட மழை குறைவு தொடர்பாகவும், அதனால் ஏற்பட்ட பயிர் சாகுபடி பரப்பு குறைவு, பயிர் பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அணைகளின் நீர் இருப்பு குறைவு காரணமாக விவசாய தேவைக்கு போதுமான நீர் திறக்க இயலாதது குறித்தும் அரசுக்கு விரிவான அறிக்கை மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது வேளாண்மை உழவர் நலத்துறையின் பரிசீலனையில் உள்ளது. மேலும், வன்னிக்கோனேந்தல் பகுதி விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாகவும் அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் 870 ஹெக்டேர் பரப்பில் மற்றும் கார் பருவத்தில் 3131 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 259 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1620 ஹெக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு சர்வேதச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும். மேலும், நடப்பு ஆண்டில் மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1825 ஹெக்டேர் பரப்பில் சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலங்களின் மண் வளத்தை பெருக்கிட குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தும் பொருட்டு சென்ற ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள 251 குளங்களும், இரண்டாவதாக 368 குளங்களும் மொத்தம் 619 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 73 குளங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் கோடைமேலழகியான் கால்வாய் 7.50 கிலோ மீட்டர் வரை அடையக்கருங்குளம் கிராமம் மற்றும் அம்பா சமுத்திரம் பகுதிகளிலும், நதியுண்ணி கால்வாய், ஆலடியூர் கிராமம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதி களிலும், கன்னடியன் கால்வாய் திம்மராஜபுரம், கல்லிடைகுறிச்சி, மற்றும் வெள்ளாங்குளி பகுதிகளிலும், கோடகன் கால்வாய் கொண்டாநகரம், பேட்டை ரூரல், பேட்டை கிராமப் பகுதிகளிலும், பாளையங்கால் கால்வாய் புத்தனேரி, சீதப்பனேரி, மற்றும் பாளை கிராமப் பகுதிகளிலும், பெருங்கால் கால்வாய் மணிமுத்தாறு கிராமப் பகுதி களிலும் துார்வாரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடியாக உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவ லாக மழை பெய்தது. மாநகர பகுதிகளான பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதி களிலும், புறநகர் பகுதி களில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
மேலும் கன்னடியன் அணைக்கட்டு, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மணிமுத்தாறு பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்பையில் 11, கொடுமுடியாறு அணை பகுதியில் 9, நாங்குநேரி, மாஞ்சோலையில் தலா 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ராதாபுரத்தில் 6, மணிமுத்தாறில் 5.60, நெல்லையில் 2, களக்காடு பகுதியில் 3.20, காக்காச்சியில் 5, நாலுமுக்கு பகுதியில் 4 மில்லி மீட்டர் என நேற்று மாவட்டம் முழுவதும் 80.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அணைகளின் நீர்மட்டம்
இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடி, சேர்வலாறு அணை 91.33 அடி, மணிமுத்தாறு 55.30 அடி, கொடுமுடியாறு 46.25 அடி, நம்பியாறு 12.49 அடியாக உள்ளது.
- டவுன் மார்க்கெட்டை நோக்கி சென்ற மினி லாரி, கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது தீடீரென மோதியது.
- விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் ரமேஷ் மது போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி மகன் கணேசன் (வயது 21).
வாலிபர் பலி
தசரா திருவிழாவை யொட்டி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது பழைய பேட்டை புளியமரத்து பஸ் நிறுத்தம் பகுதியில் டவுன் மார்க்கெட்டை நோக்கி சென்ற மினி லாரி, கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது தீடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கணேசன் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இறந்தார்.
இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி விசாரணை நடத்தினார்.
இதில் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் ரமேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.






