என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் விபத்தில் வாலிபர் பலி- குடிபோதையில் மினி லாரி ஓட்டிய டிரைவர் ஜாமீனில் வர முடியாத வழக்கில் கைது
- டவுன் மார்க்கெட்டை நோக்கி சென்ற மினி லாரி, கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது தீடீரென மோதியது.
- விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் ரமேஷ் மது போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி மகன் கணேசன் (வயது 21).
வாலிபர் பலி
தசரா திருவிழாவை யொட்டி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது பழைய பேட்டை புளியமரத்து பஸ் நிறுத்தம் பகுதியில் டவுன் மார்க்கெட்டை நோக்கி சென்ற மினி லாரி, கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது தீடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கணேசன் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே இறந்தார்.
இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி விசாரணை நடத்தினார்.
இதில் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் ரமேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.






